search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தருமபுரி மாவட்டத்தில் இன்று 1013  அரசு பள்ளிகளில் முதல்-அமைச்சர் காலை உணவு திட்டம் தொடக்கம்
    X

    தருமபுரி டி.ஆர்.சுந்தரம் தெருவில் உள்ள நகராட்சி டவுன் அரசு பள்ளியில் இன்று காலை உணவு திட்டத்தை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட காட்சி.

    தருமபுரி மாவட்டத்தில் இன்று 1013 அரசு பள்ளிகளில் முதல்-அமைச்சர் காலை உணவு திட்டம் தொடக்கம்

    • மாவட்டத்தில் 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் 51 ஆயிரத்து 538 பள்ளி மாணவ, மாணவிகள் பயன் அடைவார்கள்.
    • கலெக்டர் சாந்தி பங்கேற்று பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவை வழங்கி அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

    தருமபுரி,

    தமிழகத்தில் உள்ள 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்து இன்று நாகப்பட்டிணம் மாவட்டம் திருக்குவளையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் காணொளி காட்சி மூலம் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள 1013 அரசு பள்ளிகளில் இன்று காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டம் விரிவாக்கம் செய்யபட்டதன் மூலம் மாவட்டத்தில் 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் 51 ஆயிரத்து 538 பள்ளி மாணவ, மாணவிகள் பயன் அடைவார்கள்.

    தருமபுரி நகரில் டி.ஆர்.சுந்தரம் தெருவில் அமைந்துள்ள நகராட்சி டவுன் அரசு தொடங் கப்பள்ளியில் இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சாந்தி பங்கேற்று பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவை வழங்கி அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில், தருமபுரி எம்.பி. செந்தில்குமார், எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன், தருமபுரி தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி, மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட கல்வி அலுவலர் குணசேகரன், உணவு பாதுகாப்பு துறை பானுசுஜாதா மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள், தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோன்று தருமபுரி மாவட்டம்,பாப்பி ரெட்டிப்பட்டி வட்டம், மோளையானூர் அரசு துவக்கப்பள்ளி யில் தமிழக அரசின் காலை உணவு திட்டம் தொடக்க விழா தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய செயலாளர் ராசு.தமிழ்செல்வன், ஒன்றிய குழு உறுப்பினர் சுந்தரம் தர்மலிங்கம், பள்ளி தலைமை ஆசிரியர் வே.தாமரை செல்வி,ஊராட்சி மன்ற தலைவர் துரை பாண்டியன்,துணை தலைவர் மணி இளங்கோ,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உதய சூரியன்,முன்னாள் ஒன்றிய செயலாளர் பொன்னுசாமி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சரவணன் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கவுதமன், கிளை செயலாளர் திருவாசகம், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் தமிழ் அழகன், சண்முகம், ஆதம், கட்சி நிர்வாகிகள் கல்யாண சுந்தரம், தமிழ், ரமேஷ்,சதிஷ்,முகிலன், மகாராஜன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோன்று காரி மங்கலம், அரூர், பென்னா கரம், நல்லம்பள்ளி, மொரப்பூர், கம்பைநல்லூர் ஆகிய பகுதிகளில் இன்று அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    Next Story
    ×