search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாதுப்பட்டியில் காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்.
    X

    தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்த போது எடுத்தபடம்.

    மாதுப்பட்டியில் காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்.

    • ஸ்ரீ காளியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீ காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

    தருமபுரி,

    தருமபுரி அருகே பெரிய குரும்பட்டி அடுத்த மாதுப்பட்டியில் 100 ஆண்டு பழமையான ஸ்ரீ காளியம்மன் கோயில் உள்ளது.

    இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் சித்திரைத் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஸ்ரீ காளியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து அம்மனுக்கு கூழ் ஊற்றும் விழாவும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகளும் நடைபெற்றது. பின்னர் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதையடுத்து காளியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும், விநாயகர் தேரோட்டமும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீ காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து பல்வேறு பூஜைகளுடன் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஊர் முக்கிய பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இன்று(ஞாயிற்றுக்கிழமை) பந்தகாசி விழா நடக்கிறது.

    இதையொட்டி காலையில் கங்கை பூஜையும், மேல்நாய்க்கம்பட்டியில் அண்ணாமலை கவுண்டர் தோட்டத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அதை தொடர்ந்து அங்கிருந்து சாமி ஊர்வலமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.

    விழாவையொட்டி தர்மபுரி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், டவுன் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×