search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாய நிலத்தில் மருத்துவக்கழிவுகளை கொட்டிய  லாரிகளை சிறைபிடித்த பொது மக்கள்
    X

    மருத்துவ கழிவுகள் ஏற்றபட்ட நிலையில் லாரிகள் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம். (உள்படம்: மருத்துவமனை வளாகத்தில் திறந்த வெளியில் கொட்டபட்டுள்ள மருத்துவ கழிவுகளை படத்தில் காணலாம்.)

    விவசாய நிலத்தில் மருத்துவக்கழிவுகளை கொட்டிய லாரிகளை சிறைபிடித்த பொது மக்கள்

    • மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
    • பொதுமக்கள் மருத்துவ ஏற்றி வந்த 4 லாரிகளையும் சிறை பிடித்து தொப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி நகரம், நேதாஜி பைபாஸ் சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தினசரி பயன்படுத்தும் மருத்துவக் கழிவுகளை மருத்துவக் கல்லூரிக்கு முன்புறத்தில் கொட்டி சேகரித்து வருகின்றனர்.

    சேகரித்து வரும் மருத்துவ கழிவுகளை முறையாக நகராட்சி மூலம் பயோமெட்ரிக் முறையில் அப்புறப்படுத்த வேண்டும். ஆனால் மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு தருமபுரி நகராட்சி நிர்வாகம் முன் வராததால் மருத்துவமனை நிர்வாகம் தனியாருக்கு ஒப்பந்தம் பேசி அதன் மூலமாக டிப்பர் லாரிகளில் மருத்துவக் கழிவுகளை ஏற்றிச்சென்று திறந்த வெளியில் கொட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் தனியார் ஒப்பந்ததாரர் மருத்துவ கழிவுகளை நேற்று இரவு 11-மணியளவில் 4 டிப்பர் லாரிகளில் ஏற்றிக்கொண்டு நல்லம்பள்ளி அடுத்துள்ள கெங்களாபுரம் பகுதி வயல்வெளிகளில் உள்ள பள்ளங்களில் கொட்டியுள்ளனர்.

    அப்பொழுது கடுமையாக துர்நாற்றம் வீசியது. மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் மருத்துவ ஏற்றி வந்த 4 லாரிகளையும் சிறை பிடித்து தொப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்து மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என கூறினர்.

    இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீண்டும் மருத்துவ கழிவுகளை டிப்பர் லாரிகளில் ஏற்றி கொண்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவர்கள் பயிற்சி பெற்று வரும் கட்டிடம் அருகே நிறுத்தி வைத்துள்ளனர்.

    இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் மாணவ ர்களுக்கும், மருத்துவ பேராசிரியர்களுக்கும், நோயாளிகளுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து மருத்துவக் கல்லூரியின் உள்ளிருப்பு மருத்துவர் நாகவேந்தன் கூறும்போது கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம்.

    இது மருத்துவக் கழிவுகள் அல்ல, மருத்துவமனைக்கு உள்நோயாளிகளை பார்க்க வரும் பொதுமக்கள் தாங்கள் கொண்டு வரும் உணவு கழிவுகள், இலைகள் பிளாஸ்டிக் பொருட்கள் தான்.

    மேலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வெளியேற்றும் மருத்துவ கழிவுகளை முறையான பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் மூலம் அப்புறப்படுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

    Next Story
    ×