search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கடையம் அருகே பொதுமக்களுக்கு  இடையூறாக  இயங்கி வந்த டாஸ்மாக் கடை மூடல்
    X

    தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனை ஊராட்சி மன்ற தலைவர் பொன்ஷீலா பரமசிவன் தலைமையில்,பொதுமக்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    கடையம் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கி வந்த டாஸ்மாக் கடை மூடல்

    • வெய்க்காலிபட்டியில் இயங்கி வந்த மதுபான கடை கடந்த 3 நாட்களாக அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது.
    • இதையடுத்து சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மகிழச்சியடைந்தனர்.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட்பட்ட கடையம் பெரும்பத்து ஊராட்சி வெய்க்காலிபட்டியில் இயங்கி வந்த மதுபான கடையால் அப்பகுதியில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வந்தது. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் கூறி சம்பந்தபட்ட அதிகாரிகள் மற்றும் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனிடமும் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மகிழச்சியடைந்தனர். மேலும் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனை ஊராட்சி மன்ற தலைவர் பொன்ஷீலாெபரமசிவன் தலைமையில்,ெபாதுமக்கள் நேரில் சந்தித்து மதுக்கடையை மூடுவதற்கும், சபரி நகர் பகுதிக்கு பகுதி நேர ரேஷன் கடை கிடைப்பதற்கு பரிந்துரை செய்ததற்கும் நன்றி தெரிவித்தனர். இதில் வார்டு உறுப்பினர்கள் ஜெய மாரியம்மன், ரஞ்சிதா, பிரபு, ராஜேஸ்வரி, வேல்ராஜ், லட்சுமி வினிங்ஸ்டன் ,துணைத்தலைவர் அரசகனிரவி, தொழிலதிபர் பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×