என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கோவை தடாகம் ரோடு வக்ர காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- கே.என்.ஜி. புதூர் பிரிவு பஸ் நிறுத்தம் அருகே திரி நேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவில் உள்ளது.
- காலை 9 மணிக்கு கோபூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளும், மாலை 5 மணிக்கு முதல் கால பூஜையும் நடக்கிறது.
கோவை,
கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி. புதூர் பிரிவு பஸ் நிறுத்தம் அருகே திரி நேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் கும்பாபிஷேகம் வருகிற 8-ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடக்கிறது.
இதற்கான கும்பாபிஷேக விழா வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது. அன்று காலை 9 மணிக்கு கோபூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளும், மாலை 5 மணிக்கு முதல் கால பூஜையும் நடக்கிறது.
7-ந் தேதி காலை 8 மணிக்கு மகா பூர்ணாகுதி, எந்திர பிரதிஷ்டை, அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் ஆகிய நிகழ்ச்சிகளும், மாலை 5 மணிக்கு மூல மந்திர ஹோமம், மகா தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
8-ந் தேதி காலை 7 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, 9.15 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு, காலை 9.30 மணிக்கு விமானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.
காலை 9.45 மணிக்கு ஸ்ரீதிரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 11 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்க சிறப்பு அலங்காரம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
விழா ஏற்பாடுகளை சிவஸ்ரீ ஞானசேகர சிவாச்சா ரியார் மற்றும் குழுவினர் செய்து வருகிறார்கள்.