search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திண்டுக்கல் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகள் விடுதிகள் பதிவு செய்திட வேண்டும் கலெக்டர் தகவல்
    X

    கோப்பு படம்

    திண்டுக்கல் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகள் விடுதிகள் பதிவு செய்திட வேண்டும் கலெக்டர் தகவல்

    • இணையதளம் மூலமாக உரிய சான்றுகளுடன் பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்றவற்றை வருகிற 31-ந்தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும்.
    • விடுதியில் போதிய பாதுகாப்பு வழங்குதல் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பணிபுரியும் மகளிர் விடுதிகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் இல்லங்கள் மாவட்ட கலெக்டர் மூலம் உரிமம் பெற்று செயல்பட வேண்டும். உரிமம் இல்லாமல், பணிபுரியும் மகளிர் விடுதி மற்றும் குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் இல்லம் நடத்தக்கூடாது.

    பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொழிலாளர் நலத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விடுதிகளை பதிவு செய்தல் வேண்டும்.

    தமிழக அரசால் பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் முறைப்படுத்துதல் சட்டம் 2014-ன் கீழ் இணையதளம் மூலமாக உரிய சான்றுகளுடன் பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்றவற்றை வருகிற 31-ந்தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும்.

    18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தங்கும் இல்லங்களுக்கு உரிமை பெற திண்டுக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்திலும், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இல்லங்கள் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்படும் விடுதிகளை திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திலும், மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் பெண்கள் தங்கும் விடுதிகளை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் பதிவு செய்ய தொடர்பு கொள்ளலாம்.

    இதனை கண்காணிக்க மாவட்ட அளவில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு விடுதிகளின் செயல்பாடுகள் குறித்து தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படும். அவ்வாறு ஆய்வின் பொழுது குறைபாடுகளை கண்டறியும்பட்சத்தில் விடுதிகள் மற்றும் இல்லங்களை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் விடுதிகள், இல்லங்கள் நடத்தி வரும் அனைத்து நிர்வாகிகளும் மேற்கண்ட இணையதளத்தில் தவறாமல் பதிவு செய்தல், புதுப்பித்தல் பணியினை வருகிற 31-ந்தேதிக்குள் முடித்திட வேண்டும். விடுதியில் போதிய பாதுகாப்பு வழங்குதல் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×