search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    உல்லத்தி, மசினகுடியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
    X

    உல்லத்தி, மசினகுடியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

    • சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டி மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உல்லத்தி, மசினகுடி ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் ரூ.47.53 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் அம்ரித் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தமிழக அரசின் உத்தரவின் படி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சாலை வசதிகள், குடிநீர் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    முதலாவதாக மாவட்ட கலெக்டர் அம்ரித், ஊட்டி ஊராட்சி ஒன்றியம் உல்லத்தி ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.38 லட்சம் மதிப்பீட்டில், தலைக்குந்தா மெயின் ரோடு முதல் எம்.ஜி.ஆர் நகர் வரை சிமெண்ட் நடைபாதை மற்றும் சாலையோர தடுப்பு சுவர் அமைக்கும் பணிகனளயும், ரூ.2.20 லட்சம் மதிப்பீட்டில், எம்.ஜி.ஆர் நகர் சலீமா வீடு முதல் மோகன் வீடு வரை முடிக்கப்பட்ட நடைபாதை பணியினையும், ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கெம்பலை மெயின் ரோடு முதல் கெம்பலை கிராமம் வரை நடைபெற்று வரும் பணிகளையும், சிமெண்ட் நடைபாதை பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட கல்லட்டி பகுதியில் ரூ.14.44 இலட்சம் மதிப்பீட்டில்,பால் உற்பத்தியாளர் சங்கம் கட்டட பணியினையும், பி.ஜி.எப் திட்டத்தின் கீழ், கல்லட்டி பால் உற்பத்தியாளர் சங்கம் அருகில் ரூ.4 இலட்சம் மதிப்பீட்டில், நடைபெற்று வரும் கல்வெட்டு பணியினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்,கல்லட்டி மெயின் ரோடு முதல் தகன எரியூட்டும் மைதானம் வரை ரூ.7.71 இலட்சம் மதிப்பீட்டில், முடிக்கப்பட்ட சாலை பணியினையும், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் கலெக்டர் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மசினகுடி ஊராட்சியில், ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ், ரூ.3.30 லட்சம் மதிப்பீட்டில், வாழைத்தோட்டம் பகுதியில், சமுதாய சுகாதார வளாக கட்டுமான பணிகளையும் பார்வையிட்டும், பொது நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பயணிகள் நிழற்குடையினையும் மற்றும் மசினகுடி சாலை பகுதியில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சோக்பிட் பணியினையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    ஊட்டி ஊராட்சி ஒன்றியம் உல்லத்தி ஊராட்சி மற்றும் கூடலுார் ஊராட்சி ஒன்றியம் மசினகுடி ஊராட்சி ஆகிய பகுதிகளில் ஆக மொத்தம் ரூ.47.53 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    முன்னதாக மாவட்ட கலெக்டர், ஊட்டி ஊராட்சி ஒன்றியம் உல்லத்தி ஊராட்சி கெம்பலை கிராமத்தில் ஜல்ஜீவன் மிஷின் திட்டத்தின் கீழ் 51 குடியிருப்புகளுக்கு ரூ.7.46 லட்சம் மதிப்பீட்டில், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சாம் சாந்தகுமார், கூடலுார் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், விஜியா, கூடலுார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதர், அண்ணாதுரை, உல்லத்தி ஊராட்சி தலைவர் சந்நோஷ் குமார், ஊட்டி தாசில்தார் ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×