search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளிம்பு நிலை மக்களுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாவிற்கான ஆணை- கலெக்டர் வழங்கினார்
    X

    உளுர் மேற்கு கிராமத்தில் விளிம்பு நிலை மக்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

    விளிம்பு நிலை மக்களுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாவிற்கான ஆணை- கலெக்டர் வழங்கினார்

    • 37 தொடக்கநிலை குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
    • குழந்தைகளின் கல்வி எதிர்காலத்தில் எந்த ஒரு இடையூறின்றி மேம்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஓரத்தநாடு தாலுகா உளூர் மேற்கு கிராமத்தில் வசிக்கும் விளிம்பு நிலை மக்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது :-

    உளூர் மேற்கு கிராமத்தில் நீண்ட நாட்களாக பட்டா இன்றி வாழ்ந்து வந்த குடும்பங்களுக்கு, அவர்களின் கோரிக்கையை ஏற்று 16 குடும்பங்களுக்கு அரசு புறம்போக்கு நத்தம் வகைப்பாடுடைய நிலத்தில் 0.16.0 ஏர்ஸ் விலையில்லா வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.

    ஓரத்தநாடு ஒன்றியம் மேல உளூர் ஊராட்சியில் நரிக்குறவர் காலனி குடியிருப்பில் நீண்ட நாட்களாக பள்ளிக்கு செல்லாத 37 தொடக்கநிலை குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி மையம் மேல்நிலைப்பள்ளி மேல உளூரில் தொடங்கப்பட்டுள்ளது. இம்மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், புத்தகப்பை, வண்ணப் பென்சில்கள், சீருடை போன்றவை வழங்கப்பட்டு இக்குழந்தைகளின் கல்வி எதிர்காலத்தில் எந்த ஒரு இடையூறின்றி மேம்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில் '' ஊருக்கு ஒரு வனம்" திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் பணியினை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மேற்கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், ஓரத்தநாடு தாசில்தார் சுரேஷ், ஒரத்தநாடு ஒன்றிய குழுத் தலைவர் பார்வதி சிவசங்கர், கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் ராதிகா மைக்கேல் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×