search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் குறைதீர் கூட்டத்தில்  40 பெண்களுக்கு தையல் எந்திரங்கள் கலெக்டர் பழனி வழங்கினார்
    X

    விழுப்புரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்களை மாவட்ட கலெக்டர் பழனி வழங்கினார். அருகில் கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன் மற்றும் பலர் உள்ளனர்

    விழுப்புரம் குறைதீர் கூட்டத்தில் 40 பெண்களுக்கு தையல் எந்திரங்கள் கலெக்டர் பழனி வழங்கினார்

    • விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது.
    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் சுமார் 391 மனுக்கள் பெறப்பட்டது. அதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ், தலா ரூ.5,350 வீதம் 40 பயனாளிகளுக்கு ரூ.2,14,000 மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து 6 கல்லூரி மற்றும் 29 பள்ளி விடுதி என மொத்தம் 35 விடுதி மாணவர்களிடையே நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், பேச்சுப்போட்டி, கட்டுரை ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக, திண்டிவனம் தாசில்தார் வெங்கட சுப்பரமணி சாலை விபத்தில் உயிரிழந்ததையொட்டி, அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். இக்கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், மாவட்ட வருவாய் அலுவலர் சரஸ்வதி, தனித்துனை கலெக்டர் விஸ்வநாதன், கூடுதல் நேர்முக உதவியாளர் சிவா, மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரகுபதி, மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராணி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×