என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவை ராமநாதபுரத்தில் ரேஷன் கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
- மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவைகள் மையத்தில் 23 நோய்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை வழங்கப்படுகிறது.
- பொருட்களை உரிய நேரத்தில் வழங்க விற்பனையாளர்களிடம் அறிவுறுத்தினார்.
கோவை,
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவைகள் மையத்தை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், அங்கு சிகிச்சை பெற்றுவருபவர்களின் விவரங்கள், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார்.
இந்த மையத்தில் 0 முதல் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஏற்படும் மூளை வளர்ச்சி குறைபாடு, அன்னப்பிளவு மற்றும் உதட்டு பிளவு, கோணக்கால்கள், பிறவிக்கண்புரை, பிறவிக்காது கேளாமை, பிறவி இருதய நோய்கள், மாறுகண், தாலசீமியா, ரத்தசோகை, வைட்டமின் ஏ குறைபாடு, வைட்டமின் டி குறைபாடு உள்பட 23 நோய்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை வழங்கப்படுகிறது.
இங்கு 2022-23 ஆண்டில் 15,000 புறநோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். 4 ஆண்டுகளில் 107 பேருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 92 பேருக்கு அன்னப்பிளவு மற்றும் உதட்டு பிளவு அறுவைச் சிகிச்சையும், ஆட்டிசம் சிகிச்சை 102 குழந்தைகளுக்கும், 450 பேருக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ராமநாதபுரம் நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலையின் முத்துராமலிங்கம் வீதி நியாயவிலைக் கடை, பாரதிநகர் 6 வீதி நியாயவிலைக் கடைகளில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, குடும்ப அட்டை தாரர்களுக்கு விநியோகிக்கப்பட்ட விவரம், இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, பாமாயில், கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விவரங்களையும் கேட்டறிந்ததுடன், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவேண்டிய பொருட்களை உரிய நேரத்தில் வழங்க நியாய விலை கடை விற்ப னையாளர்களிடம் அறிவுறுத்தி னார்.
மேலும், ராமநாதபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவசர சிகிச்சை அறை, மார்பக பரிசோதனை அறை, தடுப்பூசி அறை, ஆய்வகம், பிரசவ வார்டு, ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதுடன் அங்கு கர்ப்பணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்ட விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது உதவி ஆட்சியர்(பயிற்சி) சவுமியா, அரசு மருத்துவ க்கல் லூரி மருத்து வமனை முதல்வர் டாக்டர் நிர்மலா, மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன், துணை இயக்குநர்(சுகாதாரப் பணிகள்) டாக்டர்.அருணா, மருத்துவ அலுவலர் டாக்டர்.பாலகுமார், ஆகியோர் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்