என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தொடர் மழையால் நீர் வரத்து அதிகரிப்பு முல்லைப் பெரியாற்று பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் கலெக்டர் உத்தரவு
- முல்லைபெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 166 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு ஆற்றில் வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது.
- முல்லைப் பெரியாற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆடு, மாடுகளை குளிப்பாட்டவோ ஆற்றுக்கு செல்லக்கூடாது என்று ஒவ்வொரு கிராம பகுதிகளிலும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து வருகின்றனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளும் நிரம்பி வருகிறது.
மேலும் முல்லைப் பெரி யாறு அணைப்பகுதியில் தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 137 அடியை எட்டி உள்ளது. அணையில் இருந்துவினாடிக்கு 2 ஆயிரத்து 166 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு ஆற்றில் வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சுருளி அருவியில் இருந்து வரும் தண்ணீர் நீர்நிலைகள் நிரம்பி வருகின்ற தண்ணீர் என அனைத்தும் முல்லைப் பெரியாற்றில் கலக்கின்றன.இதனால் ஆற்றில் கூடுதல் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் உத்தரவின் பேரில் உத்தமபாளையம் தாசில்தார் அர்சுணன் தலைமையில் துணை தாசில்தார்கள் கண்ணன், முருகன் மற்றும் வருவாய் துறையினர் உத்தமபாளையம் தாலுகா பகுதியில் உள்ள கிராம ஊராட்சிகள், பேரூராட்சி கள், நகராட்சி ஆகிய பகுதி மக்கள் யாரும் முல்லைப் பெரியாற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆடு, மாடுகளை குளிப்பாட்டவோ ஆற்றுக்கு செல்லக்கூடாது என்று ஒவ்வொரு கிராம பகுதிகளிலும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து வருகின்றனர்.
நேற்று மாலை உத்தம பாளையம் தாசில்தார் தலைமையில் வருவாய்த் துறையினர் உத்தமபாளை யம் முல்லைப் பெரியாற்று தடுப்பணை,கம்பம், காமயகவுண்டன்பட்டி, கருநாக்க முத்தன்ப ட்டி,கூடலூர் என முல்லைப் பெரியாறு ஆற்றங்கரை யோரங்களில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டுவருகின்றனர்.