search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் தொடக்கம்
    X

     ஊத்தங்கரை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு ஏலத்திற்கு பருத்திகளை கொண்டு வந்த விவசாயிகள்.

    ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் தொடக்கம்

    • 76 மூட்டைகளில் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்து 480க்கு விற்பனையானது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை தோறும் பருத்தி ஏலம் தொடங்கப்பட் டுள்ளதால், விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம் என கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.

    ஊத்தங்கரை ஒழுங்குமுறை விற்பனை கூட த்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் ஊத்தங்கரை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 6 விவசாயிகள், 76 மூட்டைகளில் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் அதிகப்பட்சம் ரூ.6 ஆயிரத்து 499 க்கும், குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரத்து 909-க்கும் விலை போனது. மொத்தம் பரூத்தி ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்து 480க்கு விற்பனையானது.

    இது குறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் கூறும்போது, ஊத்தங்கரை பகுதியில் விவசாயிகள் தற்போது அதிகளவில் பருத்தியை சாகுபடி செய்துள்ளனர். இதனால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு, நிகழாண்டில் பருத்தி ஏலம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு நடைபெறும் ஏலத்தில் விவசாயிகள் பங்கேற்று தங்கள் விளை நிலங்களில் பயிரிடப்பட்டபருத்தியை நல்ல விலை பெற்று பயன்பெறலாம், என்றார்.

    Next Story
    ×