search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    உயர்கல்வி வழிகாட்டல் குறித்த ஆலோசனைக் கூட்டம்
    X

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. 

    உயர்கல்வி வழிகாட்டல் குறித்த ஆலோசனைக் கூட்டம்

    • நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டல் மற்றும் ஆலோசனை வழங்குதல் குழு குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
    • பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து உயர்கல்வி தொடராத மாணவர்கள் உயர்கல்விக்கு வழிகாட்டும் இந்த ஆலோசனை குழுவை அணுகி உயர்கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் சார்பில் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டல் மற்றும் ஆலோசனை வழங்குதல் குழு குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பள்ளி படிப்பை முடித்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டி வருகிறது.

    நடப்பாண்டில் நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்படவிருக்கும் பள்ளி அளவிலான உயர்கல்வி வழிகாட்டல், ஆலோசனை வழங்குதல் குழு (Career Guidance Cell) வருகின்ற 8.6.2023 முதல் செயல்படவுள்ளது.

    மேலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத, பள்ளி இடைநின்ற மாணவர்கள் தமது கல்வியைத் தொடரத் தகுந்த வாய்ப்பை உருவாக்குகின்ற வகையில் தலைமையாசிரியர் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர் தலைமையில் முன்னாள் மாணவர்கள் ஆதரவு பெறவும்,

    பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர்களை வலுப்படுத்தவும் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் வழிகாட்டலில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் இணைந்து செயல்படவும், பயிற்சிகள் வழங்கவும் மாநிலக் கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம் 18.04.2023 மற்றும் 19.04.2023 சென்னையில் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து, மாவட்ட அளவிலான பயிற்சிகள் வருகின்ற ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் மே மாதம் 5ஆம் தேதி வரை மாணவர்களின் நலன் மற்றும் முழு வளர்ச்சியில் வெவ்வேறு பங்குரிமையர்களான (Stakeholders) தலைமையாசிரியர்கள்.

    பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர், பள்ளி மேலாண்மைக் குழு கல்வியாளர். பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளர் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், வட்டார வள மைய பயிற்றுநர்கள் மற்றும் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள், மாணவர்கள் ஆகியோர் இணைந்து செயல்படவும், தொடர் பங்களிப்பை வழங்கிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதன்படி தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பயிற்சிகள் 24.4.2023 முதல் 5.5.2023 வரை நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து உயர்கல்வி தொடராத மாணவர்கள் உயர்கல்விக்கு வழிகாட்டும் இந்த ஆலோசனை குழுவை அணுகி உயர்கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம்.

    மேலும் இந்த குழுக்கள் இது போன்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களை உயர்கல்வியில் சேர்க்கும் பணிகளை சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் கல்லூரி கல்வி இணை இயக்குநர் ராமலட்சுமி, முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் ஜெயபிரகாசம், கேசவ க்குமார், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் ரவிக்குமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×