search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னைக்கு அடுத்தப்படியாக செங்கல்பட்டில் கொரோனா அதிகரிப்பு-  அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
    X

    கொரோனா பரிசோதனை                  மா.சுப்பிரமணியன்

    சென்னைக்கு அடுத்தப்படியாக செங்கல்பட்டில் கொரோனா அதிகரிப்பு- அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

    • கொரோனா தொற்று பரவல் விகிதம் 10 சதவீதத்தை தாண்டும் போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
    • கொரோனா பரிசோதனையை அதிகரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை.

    செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கொரோனா பெருந்தொற்று தடுப்பு பணிகள தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த துறையை சேர்ந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

    தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சென்னை அடுத்தப்படியாக செங்கல்பட்டில் தான் அதிக பாதிப்பு இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளொன்றுக்கு 500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    அதனை ஆயிரமாக அதிகரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளோம். செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்காக 400 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்று பரவல் விகிதம் 10 சதவீதத்தை தாண்டும் போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கபட வேண்டும் என்பது மத்திய அரசின் விதிமுறை, ஆனால் தமிழகத்தில் கொரோனா பரவல் 2, 3 சதவீதத்திலேயே பாதிப்பு விகிதம் உள்ளது. கொரோனா பரவல் மேலும் அதிகரித்தால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×