என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம்
- கூட்டம் பேருராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது.
- 18 வார்டுகளிலும் விடுபட்ட குடிநீர் குழாய் இணைப்புக்கள் வழங்கவும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி கூட்டரங்கில் மாதாந்திர மன்ற கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம் பேருராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் வரவு - செலவு அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டது.
மழைக்காலங்களில் சாலை மற்றும் தெருக்களின் ஓரம் தேங்கும் கழிவுநீரை அகற்றுவதற்காக மத்திய ஸ்வச்சபாரத் திட்டத்தின் கீழ் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் வாகனம் மற்றும் குப்பைகளை அள்ளி செல்ல தானியங்கி வாகனம் வாங்கவும், கழிவு நீர் கால்வாய் இல்லாத பகுதிகளில் புதிய கழிவு நீர் கால்வாய் அமைக்கவும், பழுதடைந்த சாலைகள் மற்றும் கழிவுநீர் கால் வாய்களை புனரமைக்கவும், 18 வார்டுகளிலும் விடுபட்ட குடிநீர் குழாய் இணைப்புக்கள் வழங்கவும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர் ரவீந்திரன், தலைமை எழுத்தர் அபுபக்கர், டெக்னிசியன், அலுவலர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் துணைத் தலைவர் தாஹசீனா இதாயத்துல்லா நன்றி தெரிவித்தார்.