என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாட்டுசந்தையில் உரிய விலை இல்லாததால் நாட்டு மாடு வளர்ப்போர் கவலை
- பத்துக்கும் மேற்பட்ட காளை வகைகளும் மாடுகளும் விற்பனைக்கு வந்துள்ளது.
- ஆள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்த மாடு வளர்ப்போர் வேதனை அடைந்துள்ளனர்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டையில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் தேர்திருவிழா தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் தேர் திருவிழா நடைபெறும் 15 நாட்களும் மாட்டுச்சந்தையும் நடைபெறுவது வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பேரிடர் காலத்தில் திருவிழா மற்றும் மாட்டு சந்தை நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு மீண்டும் தேரோட்ட திருவிழாவும் அதனை ஒட்டி நாட்டு மாட்டுச்சந்தையும் நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டுகளில் தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மாடுகளின் வரத்தும் அதே அளவு விற்பனையும் நடைபெற்ற வந்த நிலையில் இந்த ஆண்டும் வெளி மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் மாடுகளை வாங்குவதற்கு பெரிய அளவில் ஆர்வம் காட்டாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மாடுகளும் விற்பனைக்கு குறைந்த அளவில் வந்துள்ள நிலையிலும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட காளை வகைகளும் மாடுகளும் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் நல்ல விற்பனை இருக்கும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் விற்பனை மந்தமாகவும் கேட்பதற்கு ஆள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்த மாடு வளர்ப்போர் வேதனை அடைந்துள்ளனர்.
நாட்டு மாடுகளை பொறுத்த வரை அதிக அளவில் விவசாய நிலங்களில் ஏர் உழுவதற்கும் அதிக அளவில் பயன்படுத்துகின்ற நிலையில் தற்பொழுது அதிலிருந்து மாற்றம் ஏற்பட்டு டிராக்டர் போன்ற சாதனைகளை பயன்படுத்தியதால் அதிக அளவில் நாட்டு மாடுகள் வளர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது.
தற்போது ஜல்லிக்கட்டு தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்று அனைத்து மாவட்டங்களில் நடைபெற்று வந்தாலும் தற்போது அதியமான் கோட்டையில் நடைபெறும் மாட்டுச் சந்தையில் மாடுகள் விற்பனை மற்றும் காளைகளின் விற்பனை குறைந்து காணப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்