search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளரி சாகுபடி பணிகள் மும்முரம்
    X

    சாகுபடி செய்யப்பட்ட வெள்ளரி பிஞ்சுகள்.

    வெள்ளரி சாகுபடி பணிகள் மும்முரம்

    • கைக்கு லாபம் கிடைக்க வேண்டிய நேரத்தில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை.
    • ஒரு‌ கிலோ ரூ.50 முதல் 60 என்ற நல்ல விலைக்கு விற்பனையாகிறது.

    நாகப்பட்டினம்:

    வெயில் காலத்தில் சூட்டை தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்துவதில் வெள்ளரி பிஞ்சு முக்கிய பங்கு வகிக்கிறது.கோடை காலம் துவங்கியவுடன்,வெள்ளரி பிஞ்சு விற்பனை அமோகமாக இருக்கும்.

    அதன்படி நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட வேளாங்கண்ணி சுற்றுவட்டார பகுதிகளான பூவைத் தேடி,விழுந்தமாவடி,புதுப்பள்ளி,வேட்டைகாரணிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 200 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் விவசாயிகள் வெள்ளரி சாகுபடி செய்துள்ளனர்.

    கடந்த பிப்ரவரி மாதம் பயிர் செய்த வெள்ளரிச்செடிகள், தற்போது பூ விட்டு வளர்ந்து வருகின்றன. இருப்பினும் பல்வேறு இடங்களில் வெள்ளரி செடியை ஒருவித வைரஸ் நோய் தாக்குவதால் வெள்ளரி பிஞ்சுகள் போதிய வளர்ச்சியின்றி உள்ளது.

    குறிப்பாக நோய் தாக்குதல் காரணமாக பெரும்பாலான வெள்ளரி செடிகள் காய்க்கும் பருவத்திலேயே இலைகள் கருகியும் பூக்கள் கொட்டி விடுவதால் போதிய விளைச்சல் இல்லாமல் உள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் மோட்டார் மூலம் நீர் பாச்சி சாகுபடி செய்து, கைக்கு லாபம் கிடைக்க வேண்டிய நேரத்தில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கடந்த ஆண்டு விளைச்சல் அதிகமாக இருந்ததால் ஒரு கிலோ ரூபாய் 30 முதல் 40 வரை மட்டுமே விற்பனையானது.ஆனால் இந்தாண்டு ஒரு கிலோ ரூ. 50 முதல் 60 என்ற நல்ல விலைக்கு விற்பனையாகிறது.இந்தநிலையில்உரிய விலை கிடைத்தும் போதிய விளைச்சல் இல்லை என்கின்றனர்.

    ஆகவே சம்பந்தப்பட்ட தோட்டக்கலை துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வெள்ளரி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×