search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் வில்வராயநத்தம்  திரவுபதி அம்மன் கோவிலில்திருக்கல்யாண உற்சவம்: நாளை தீமிதி திருவிழா நடக்கிறது
    X

    கடலூர் வில்வராயநத்தம் திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது.

    கடலூர் வில்வராயநத்தம் திரவுபதி அம்மன் கோவிலில்திருக்கல்யாண உற்சவம்: நாளை தீமிதி திருவிழா நடக்கிறது

    • பரிவேட்டை, சாமி வீதி உலா, அரவான் களப்பலி மற்றும் தெருக்கூத்து நடைபெற்றது.
    • நாளை மாலை 6 மணி அளவில் தீமிதி திருவிழாக நடைபெற உள்ளது.

    கடலூர்:

    கடலூர் வில்வராய நத்தத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் தீமிதி பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடைபெறு வது வழக்கம். தீமிதி திருவிழா பிரம்மோற்சவ விழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்று வந்தது. நேற்று முக்கிய விழாவான திருக்கல்யாணம உற்சவம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரத் தில் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து வில் வளைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மங்கள வாத்தியத்துடன் வேத மந்திரம் முழங்க திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. பின்னர் பரிவேட்டை, சாமி வீதி உலா, அரவான் களப்பலி மற்றும் தெருக்கூத்து நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். பின்னர் 21 சுமங்கலி பெண்களுக்கு மங்களப் பொருட்கள் அடங்கிய வரிசை தட்டு மற்றும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் ஸ்ரீ திருப்பதி வெங்கடா ஜலபதி லாரி சர்வீஸ் உரிமையாளர் அருணாச சலம், கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள், நிர்வாக செயலாளர் செல்வராஜ், இணை செயலாளர் திருமால்ராஜ், பொருளாளர் ரமேஷ் மற்றும் இளைஞர்கள், விழா குழுவினர் கலந்து கொண்ட னர்.

    இன்று (18 ந்தேதி) மாலை அர்ஜுனன் தபசு, விசேஷ சாந்தி, சாமி வீதி உலா, கரகத் திருவிழா நடைபெறுகிறது. நாளை (19 ந்தேதி) பிரம்ம உற்சவத்தின் சிகர விழாவான தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து காலையில் அரவான் புறப்பாடு, வீர மாங்காளி புறப்பாடு உள் ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பின்னர் மாலை 6 மணி அளவில் தீமிதி திருவிழாக நடைபெற உள்ளது. விழாவிற்கு அய்யப்பன் எம். எல்.ஏ , 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பிரகாஷ் ஆகியோர் தலைமை தாங்கு கிறார்கள். கூட்டு றவுத்துறை தனி அதிகாரி கிருஷ்ணராஜ், மகாலட்சுமி கல்வி நிறுவன உரிமையாளர் ரவி ஆகி யோர் கலந்து கொள்கிறார் கள். தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடு களை விழா குழு தலைவரும், ஸ்ரீ திருப்பதி வெங்கடா ஜலபதி லாரி சர்வீஸ் உரிமையாளருமான அருணாச்சலம், நிர்வாக செயலாளர் செல்வராஜ், இணை செயலாளர் திருமால்ராஜ், பொருளாளர் ரமேஷ் மற்றும் விழா குழுவினர் இளைஞர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×