search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காரைக்காலில் மது, சாராயக் கடைகளில் கலால்துறை அதிகாரிகள் சோதனை
    X

    காரைக்கால் மாவட்ட துணை கலெக்டர், கலால்துறை அதிகாரி ஜான்சன் டாஸ்மாக்கில் சோதனை செய்ததை படத்தில் காணலாம்.

    காரைக்காலில் மது, சாராயக் கடைகளில் கலால்துறை அதிகாரிகள் சோதனை

    • சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
    • கலால்துறை அதிகாரி ஜான்சன் நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம் பகுதியில் கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலை யில் காரைக்கால் மாவட்ட துணை கலெக்டரும், கலால்துறை அதிகாரியுமான ஜான்சன், வட்டாட்சியர் மதன்குமார் மற்றும் பலர், மாவட்டம் முழுவதும் உள்ள 100-க்கு மேற்பட்ட மதுக்கடைகள், பார்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட சாராயக் கடைகளில், அதி ரடி சோதனை மேற்கொ ண்டனர்.

    இந்த சோதனையின் போது, மதுபானக் கடை மற்றும் சாராயக்கடைகளில் காலாவதியான மது பாட்டில்கள் உள்ளதா? எனவும், மொத்தமாக அண்டை மாநிலங்களுக்கு மது விற்பனை செய்யப்ப டுகிறதா? என்பது குறித்தும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் முறை யாக கணக்குகளை பராமரி க்காத மதுபான கடைகளுக்கு கலால்துறை அதிகாரி ஜான்சன் நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார். மேலும், காரைக்கால் பகுதியில் இருந்து தமிழக த்துக்கு மது கடத்தலை எல்லையோரங்களில் கண்காணிக்கவும், அரசால் தடை செய்யப்பட்ட பிளா ஸ்டிக் கப்புகள் பயன்ப டுத்தும் மதுபான கடைக ளுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார்.

    Next Story
    ×