என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சின்னமனூரில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் பெண் பிணம்
- சின்னமனூரில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் பெண் பிணமாக கிடந்தார்
- போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேனி:
தேனி மாவட்டம் கம்பம் மணிேநரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது தங்கை ஜோதி (வயது40) என்பவருக்கும் காமாட்சி புரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் என்பவருக்கும் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு மனோஜ் (20) என்ற மகனும், சர்மிளா (18) என்ற மகளும் உள்ளனர். ஜோதி வீட்டு வேலை மற்றும் பூ கட்டும் வியாபாரம் பார்த்து வந்தார். அவரது கணவர் முருகன் பூக்கடை யில் வேலை பார்த்து வந்துள்ளார். மகள் சர்மிளா திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். மனோஜ் ஆண்டிபட்டியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். ஆனால் தற்போது படிப்பை நிறுத்தி விட்டு அதே கல்லூரியில் மாரத்தான் பயிற்சியில் உள்ளார்.
முருகன் குடி பழக்க த்துக்கு அடிமையானதால் கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து சில நாட்களாக முருகன் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். இந்நிலையில் திருப்பூரில் இருந்து சர்மிளா தனது தாயிக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்து தனது அண்ணன் மற்றும் பாட்டிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சர்மிளா மற்றும் மனோஜ் ஆகியோர் வீட்டிற்கு வந்த பார்த்துள்ளனர். வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊர் தலைவர் முன்னிலையில் கதவை உடைத்து பார்த்த போது ஜோதி அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து ஓடைப்பட்டி போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜோதி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.