search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    விருதுநகரில் நடந்த அரசு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி
    X

    விருதுநகரில் நடந்த அரசு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி

    • விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா
    • ரூ.3.85 கோடி மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள்

    விருதுநகர்:

    தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். முதல் நிகழ்ச்சியாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மகளிர் குழுவினருக்கு கடனுதவிகளை வழங்கினார்.

    இதையடுத்து மதுரை, விருதுநகரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு மதுரை வருகை தந்தார்.

    துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக வருகை தந்த அவருக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    விமான நிலையத்திற்கு வெளியே திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்த னர். இதையடுத்து மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் இரவு தங்கினார்.

    இன்று காலை அவர் விருதுநகர் புறப்பட்டார். மதுரை சாலையில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை முன்பு கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் மேளதாளங்கள் முழங்க உதயநிதி ஸ்டாலி னுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதையடுத்து விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் கலெக்டர் ஜெயசீலன் வரவேற்றார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டா லின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகளுக்கு ரூ.2.85 கோடி மதிப்பில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரண தொகுப்புகளை வழங்கினார்.

    பின்னர் முதலமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டு போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 2,111 நபர்களுக்கு ரூ.42.96 லட்சம் மதிப்பிலான பரிசு தொகைகளையும், 255 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.45.39 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள், 20 மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் புரிவதற்கான வங்கி கடன் மானியம் என 2,386 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான கலைஞர் விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சியினை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    பின்னர் ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணம் கொண்டு செல்லும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    விழா நிறைவடைந்ததும் மீண்டும் மதுரை வருகை தந்த அவர் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி மதுரை மற்றும் விருதுநகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×