search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும்- பொதுமக்களுக்கு தருமபுரி கலெக்டர் அறிவுரை
    X

    கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசிய காட்சி.

    குடிநீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும்- பொதுமக்களுக்கு தருமபுரி கலெக்டர் அறிவுரை

    • பொதுமக்கள் தங்கள் கிராமங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்து தூய்மையாக வைத்து கொண்டால் சிறந்த ஊராட்சிக்கான விருதினை பெறும் வாய்ப்பினை அனைத்து ஊராட்சிகளும் பெறலாம்.
    • பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பொம்மஅள்ளி ஊராட்சியில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் சாந்தி கலந்து கொண்டார்.

    இக்கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது தெரிவித்த தாவது:-

    சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெறுகின்றது.

    இந்த பொம்மஅள்ளி ஊராட்சியில் நடைபெறு கின்ற இக்கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

    தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், தருமபுரி மாவட்ட மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் அரசு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது.

    அத்தகைய திட்டங்களை கடைக்கோடி கிராமங்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியினை மாவட்ட நிர்வாகம் முனைப் போடு செயல்படுத்தி வரு கின்றது.

    கிராமங்களின் வளர்ச்சி மிக முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில் கிரா மங்களின் வளர்ச்சிக்கு அரசு செயல்படுத்தி வருகின்ற திட்டங்களை பொதுமக்களும் முழுமை யாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    பொதுமக்கள் தங்கள் கிராமங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்து தூய்மையாக வைத்து கொண்டால் சிறந்த ஊராட்சிக்கான விருதினை பெறும் வாய்ப்பினை அனைத்து ஊராட்சிகளும் பெறலாம்.

    இந்த ஊராட்சியும் சிறந்த ஊராட்சிக்கான விருதினை பெறுவதற்கு உரிய அனைத்து நடவடிக்கை களையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் குடிநீர் படிப்படியாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. நீர் சேமிப்பு இன்றைய காலக்கட்டத்தில் மிக முக்கியமான ஒன்றாகும்.

    பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். இந்த கிராம சபைக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் நேரி டையாகவும், மனுக்களின் வாயிலாகவும் தெரி வித்துள்ளீர்கள்.

    அதுகுறித்து உரிய ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டு, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நிறைவேற்றக்கூடிய அனைத்து திட்டங்களும் படிப்பாயாக நிறை வேற்றப்படும்.

    மேலும். தகுதியான நபர்களுக்கு, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் மாலா, காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெரியண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் கலைவாணி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தீபா, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பழனியம்மாள், பொம்மஅள்ளி ஊராட்சி மன்றத்தலைவர் தீர்த்தகிரி உட்பட அனைத்து வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×