search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி மாவட்டத்தில் 10 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை
    X

    தருமபுரி குமாரசாமிப்பேட்டை கூட்டுறவு ரேஷன் கடையில் தக்காளி விற்பனையை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

    தருமபுரி மாவட்டத்தில் 10 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை

    • ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • தருமபுரி குமாரசாமிப்பேட்டை கூட்டுறவு ரேஷன் கடையில் தக்காளி விற்பனையை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

    தருமபுரி,

    தமிழகம் முழுவதும் 500 ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்ய தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி தருமபுரி மாவட்டத்தில் 10 ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தருமபுரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை கட்டுப்பாட்டில் உள்ள தருமபுரி குமாரசாமிப்பேட்டை கூட்டுறவு ரேஷன் கடையில் தக்காளி விற்பனையை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சந்தானம், துணைப் பதிவாளர்கள் ராஜா, மதியழகன் மற்றும் கூட்டுறவு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×