search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி ராமக்காள் ஏரியை   மேம்படுத்துவது குறித்து கலெக்டர் ஆய்வு
    X

     ராமக்காள் ஏரியினை மேம்படுத்துவது குறித்து மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட போது எடுத்தபடம்.

    தருமபுரி ராமக்காள் ஏரியை மேம்படுத்துவது குறித்து கலெக்டர் ஆய்வு

    • ராமக்காள் ஏரியானது 205 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியாகும்.
    • 265 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு இந்த ஏரி வாய்ப்பாக அமைந்துள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட மதிகோண்பாளையம் அருகில் உள்ள ராமக்காள் ஏரியினை மேம்படுத்துவது குறித்து மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ராமக்காள் ஏரியானது 205 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியாகும்.

    இதன் அருகாமையில் உள்ள சுமார் 265 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு இந்த ஏரி வாய்ப்பாக அமைந்துள்ளது. தருமபுரி நகராட்சியில் அமைந்துள்ள மிகப்பெரிய பரப்பளவு கொண்ட நீர் நிறைந்துள்ள இந்த ஏரியின் கரைகள் மற்றும் நுழைவுவாயில்கள் ஆகியவற்றை செம்மை படுத்தி, ஏரி கரையினை அழகுபடுத்துதல்.

    நடைப்பயிற்சி மேற்கொள்வோர் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல், பசுமை நிறைந்த மரங்கள் நடுதல், பூக்கள் நிறைந்த வனங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்ட பகுதியாக ராமக்காள் ஏரிக்கரைப் பகுதிகளை மாற்றுவது குறித்தும் மாவட்ட கலெக்டர் சாந்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நீர்வளத்துறை, தருமபுரி நகராட்சி உள்ளிட்ட அலுவலர்கள் ஒன்றிணைந்து இந்த பணிகளை மேற்கொள்வ தற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென அலுவலர் களுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது சப்-கலெக்டர் சித்ரா விஜயன், தருமபுரி நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், தருமபுரி வருவாய் வட்டாட்சியர் ராஜராஜன், நீர்வளத்துறை உதவி பொறியாளர்கள் மோகனப்பிரியா, மாலதி, நிலஅளவை அலுவலக மேலாளர் கல்பனா உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×