search icon
என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • விபத்து ஏற்படும் வகையில் 100-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வைத்து உள்ளனர்.
    • நடவடிக்கை எடுக்க ேகாரி வட்டாட்சியரிடம் புகார் மனு

     தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு குடியிருப்பு பகுதியில் சுமார் 200- க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பாலக்கோடு - பெல்ரம்பட்டி பிரதான சாலை ஓரம் தனியார் கேஸ் ஏெஜன்சி கட்டிடத்தில் விபத்து ஏற்படும் வகையில் 100-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வைத்து உள்ளனர்.

    மேலும் விதிமுறைகளை மீறி ஓட்டல் உள்ளிட்ட கடைக்காரர்களுக்கு கேஸ் கிலோ கணக்கில் சில்லறை விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு விற்பனை செய்யும்போது பாதுகாப்பற்ற முறையில் சிலிண்டர்களை நிரப்புவதால் சிலிண்டர்கள் வெடிக்கும் அபாயம் உள்ளது.

    மேலும் பகல், இரவு நேரங்களில் அடிக்கடி காதை பிளக்கும் அளவிற்கு சத்தம் வருவதால், குழந்தைகள், முதல் முதியவர்கள் வரை பெரும் சிரமத்திற்க்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கேஸ் குடோனை இப்பகுதியில் இருந்து அப்புறபடுத்த கோரி பாலக்கோடு வட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

    புகாரை பெற்று கொண்ட வட்டாட்சியர் ஆறுமுகம் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலருக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்தார்.

    • கடுமையான மூடுபனி மற்றும் குளிர் நிலவியது.
    • வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய வைத்தபடி சென்றனர்.

     தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான மூடுபனி மற்றும் குளிர் நிலவியது.பெங்க ளூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கடுமை யான மூடுபனியால் முன்னால் செல்லும் ஆட்கள் தெரியாத தால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய வைத்தபடி சென்றனர்.

    அதிகாலை நேரத்தில் தொடங்கிய பனிமுட்டம் காலை 8 மணியை கடந்தும் குறையவில்லை. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி பொழிவு அதிகமாக காணப்பட்டது.

    இந்த கடும் பனி மூட்டம் காரணமாக வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர். மேலும் கார்த்திகை மாதத்தில் தொடங்கிய முதல் பனிப்பொழிவு அதிக அளவிலான பனிப்பொழிவுவாக நிலவியது. தற்பொழுது நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதி சீதோசன நிலையானது ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ளதை போல உள்ளது.

    • தாயார் இறந்துவிட்ட நிலையில் அங்கேயே இருந்து விட்டார்.
    • மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

     தருமபுரி ஒட்டப்பட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர் மாதன். இவரது மனைவி தீபா .இவர் சாமி செட்டி பட்டியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்த ஆசிரியர் தீபா கடந்த 18-ம் தேதியன்று வெண்ணாம்பட்டி குடியிருப்பில் உள்ள உடல்நிலை சரியில்லாத தனது தாயாரை பார்க்கச் சென்றார். அங்கு அவரது தாயார் இறந்துவிட்ட நிலையில் அங்கேயே இருந்து விட்டார்.

    இந்நிலையில் கடந்த 18-ம் தேதியன்று இரவு தீபாவின் வீட்டின் கதவை உடைத்துக் மர்ம நபர்கள் வீட்டில் உள்ளே இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து சுமார் 12 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். இது குறித்து மறுநாள் காலையில் பக்கத்து வீட்டில் இருந்த நபர்கள் தீபாவுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் அங்கு வந்து பார்த்தபோது வீடு கதவுகள் உடைக்கப்பட்டு பீரோ உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சடைந்தார். தீபா தனது தாயார் இறந்து விட்டதால் வெண்ணாம்பட்டி குடியிருப்பில் இருந்து விட்ட நிலையில் அவர் தனது வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் தெரிவிக்கவில்லை.

    தீபா நேற்று அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கொள்ளை சம்பவம் நடந்து 17 நாட்களுக்குப் பிறகு தாமதமாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அதியமான் கோட்டை போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளின் மதிப்பையும் குறைத்து 12 பவுன், ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரம் என குறைத்து மதிப்பிட்டு வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டி.புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி துரைராஜ் என்பவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று இருந்தார்.
    • உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் பணம் திருடு போயிருப்பது தெரிய வந்தது.

    மொரப்பூர்:

    கோவையில் உள்ள பிரபல நகை கடையில் சிறிய துவாரத்தின் வழியாக கடந்த 28-ந்தேதி நுழைந்த வாலிபர் 4½ கிலோ தங்க மற்றும் வைர நகைகளை திருடிச் சென்றார்.

    இதுகுறித்து கோவை தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள தேவரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய் (வயது 28) என்பது தெரிய வந்தது. ஆனைமலையில் வீட்டில் பதுங்கி இருந்த விஜய்யை பிடிக்க தனிப்படை போலீசார் சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தேவரெட்டியூரில் உள்ள விஜயின் தந்தை முனிரத்தினம், அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது தங்க மோதிரம், தங்க பிரேஸ்லெட் உள்ளிட்ட தங்க நகைகளும், 2 செல்போன்களும் வீட்டுக்குள் வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த முனிரத்தினம் அவற்றை கம்பைநல்லூர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு வந்து முனிரத்தினத்திடம் விசாரித்து அந்த நகைகளை பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் டி.புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி துரைராஜ்(45) என்பவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று இருந்தார். நேற்று அவர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் பணம் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக தகவல் அறிந்த மொரப்பூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    கோவை நகை கடையில் திருடிய விஜய், துரைராஜ் வீட்டில் திருட்டில் ஈடுபட்டானா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை நகை கடையில் திருடிய விஜய் அந்த மலைப்பகுதியில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக கோவை தனிப்படை போலீசார் அந்த பகுதியில் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • நான் குழந்தைகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நிலையில் அவரை வீட்டிற்கு வெளியே அழைத்து வந்தேன்.
    • குடிபோதையில் செக்ஸ் டார்ச்சர் செய்து தகாத வார்த்தையால் திட்டி என்னை அடித்து துன்புறுத்தினார்.

    அரூர்:

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கீரைப்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜா(40). கூலி தொழிலாளி இவரது மனைவி கனகா(34) ராஜா என்பவர் கடந்த 1-ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இவரது சாவில் சந்தேகம் இருப்பதாக அவர் தாய் ராதாமணி அரூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் அரூர் போலீசார் சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை செய்தனர். இந்நிலையில் அவரது மனைவி கனகாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் தனது கனவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து அளித்துள்ள வாக்குமூலத்தில் எனது கணவர் கூலி தொழில் செய்து வருகிறார். தினமும் மதுபோதையில் வீட்டிற்கு வந்து செக்ஸ் டார்ச்சர் செய்வார். சம்பவத்தன்று இரவில் அதிக மதுபோதையில் வீட்டிற்கு வந்தார்,

    பின்னர் என்னை செக்ஸ் டார்ச்சர் செய்தார் எனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறினேன், அதை பொருட்படுத்தாமல் அவரது ஆசைக்கு இணங்க என்னை வற்புறுத்தினார்.

    நான் குழந்தைகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நிலையில் அவரை வீட்டிற்கு வெளியே அழைத்து வந்தேன். பின்னர் அவர் குடிபோதையில் செக்ஸ் டார்ச்சர் செய்து தகாத வார்த்தையால் திட்டி என்னை அடித்து துன்புறுத்தினார்.

    நானும் எனது தற்காப்புக்காக அவரை தாக்கினேன் அதில் அவர் மயக்கம் அடைந்து விட்டார் என எண்ணி நான் கதவை தாளிட்டு உறங்கச் சென்று விட்டேன், மீண்டும் எழுந்து வந்து பார்த்த பொழுது எனது கணவர் அங்கேயே இருந்தார். அவரை நான் தட்டி எழுப்பியபோது இறந்து கிடந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரது உடவை யாருக்கும் தெரியாமல் ஓடையில் வைத்து விட்டு நான் வீட்டிற்கு வந்து விட்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

    • விஜய் இருக்கும் இடத்தை குறித்து அவரது தந்தை முனிரத்தினத்திடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
    • கொள்ளையன் விஜயின் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள தேவரெட்டியூரைச் சேர்ந்தவர் முனிரத்தினம். இவரது மனைவி மாரம்மாள். இவர்களுக்கு விஜய் (வயது 28) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

    கோவையில் உள்ள பிரபலமான நகை கடையில் 100 பவுன் நகை மற்றும் வைர நகைகளை விஜய் கொள்ளையடித்து சென்றுள்ளார்.

    இதுகுறித்து கோவை போலீசார் விசாரணை நடத்தி ஆனைமலையில் உள்ள விஜயின் மனைவி நர்மதா என்பவரையும், தருமபுரி மாவட்ட அரூரை அடுத்த தும்பலஅள்ளியில் உள்ள மாமியார் யோகராணியையும் கைது செய்து விசாரித்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து கோவை மற்றும் தருமபுரி மாவட்ட தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த விஜயை தேடிவந்தனர். இந்த நிலையில் விஜய் இருக்கும் இடத்தை குறித்து அவரது தந்தை முனிரத்தினத்திடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது முனிரத்தினம் வீட்டில் இருந்த 38 கிராம் நகைகளையும், 2 செல்போன்களையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அப்போது பொம்பட்டி மலை கிராமத்தில் மர்ம நபர் உலாவருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அந்த நபர் விஜயாக இருக்கக்கூடும் என்று எண்ணி முனிரத்தினத்தையும் உடன் அழைத்து சென்று தேடிவந்தனர்.

    இதைத்தொடர்ந்து நேற்று இரவு தனிப்படை போலீசார் முனிரத்தினத்தை அவரது வீட்டில் விட்டு சென்றனர்.

    வீட்டில் மாரம்மாளும், அவரது மருமகன்களும், மகள்களும் இருந்தனர். பின்னர் அவர்கள் உறவினர் ஒருவரது வீட்டில் சாப்பிடுவதற்காக சென்றனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த முனிரத்தினம் திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    இதுகுறித்து மாரம்மாள் கம்பைநல்லூர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முனிரத்தினத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொள்ளையன் விஜயின் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பேரூர் கழக செயலா ளர்கள் முரளி, எம்.ஏ. வெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்றது.
    • நலத்திட்ட உதவிகளின் விபரம் உள்ளிட்டவைகள் பூர்த்தி செய்வது குறித்து விளக்கமளித்தார்

    மாரண்டஅள்ளி,

    தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க மேற்கு மாவட்ட வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் பேரூர் கழக செயலாளர்கள் முரளி, எம்.ஏ. வெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு மாநில தகவல் நுட்ப துணைசெயலாளர் மற்றும் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் தமிழ் மாறன் முன்னிலை வகித்தார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக தர்மபுரி மாவட்ட தி.மு.க மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் உயர் கல்விதுறை அமைச்சர் பழனியப்பன் கலந்து கொண்டு வாக்கு சாவடி முகவர்க ளுக்கு வாக்கா ளர்களின் விண்ணப்பங்களில் குடும்ப உறுப்பிணர்கள் விபரம், அரசிடம் இருந்து பெறும் நலதிட்ட உதவிகளின் விபரம் உள்ளிட்டவைகள் எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது குறித்து பு விளக்கமளித்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் வக்கில் மணி, மாவட்ட பொருளாளர் முருகன், மாநில விவசாய அணி துணைத் தலைவர் சுப்ரமணி, ஒன்றிய செயலாளர்கள் முனியப்பன், அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், மாவட்ட நெசவாளர் பிரிவு அமைப்பாளர் ராஜபார்ட் ரங்கதுரை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஹரிபிரசாத் மற்றும் பூத் கமிட்டி வாக்கு சாவடி முகவர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், பேரூர் கழக பொறுப்பாளர்கள் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • காவேரிப்பட்டணம் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்,
    • போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

      தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில் போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக ரகசிய தகவலின் பேரில் தருமபுரி காவல் ஆய்வாளர் மோகன் தலைமையில் போலீசார் பாலக்கோட்டில் இருந்து காவேரிப்பட்டணம் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர், அப்போது எலுமிச்சன அள்ளி பஸ் நிறுத்தம் அருகே அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர் . அதில் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து போலீசார் ஓட்டுநர் மற்றும் உடன் இருந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இருவரும் காரிமங்கலத்தைச் சேர்ந்த ஓட்டுநர் அணில் ரகுமான் (28), முக்குளத்தைச் சேர்ந்த கணேசன் (30) என்பதும் தெரியவந்தது. இருவரும் தருமபுரியில் இருந்து காவேரிப்பட்டி னத்திற்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து சரக்கு வாகனத்துடன் ரேஷன் அரிசியையும் கைப்பற்றி பறிமுதல் செய்துள்ளனர்.

    ரேஷன் அரிசி முட்டை கள் தருமபுரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    • பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தருமபுரி,டிச.6-

    பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்ட த.மு.மு.க. சார்பில் இன்று பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுபேதார் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஜனாப் ஹமீது, தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, இக்பால், மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன், சி.பி.ஐ.எம் மாவட்ட செயலாளர் குமார், சமூக நல்லிணக்க மேடை இணை ஒருங்கிணைப்பாளர் பொ.மு. நந்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் த.கு. பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் 450 ஆண்டுகால வரலாற்றுச் சின்னமான பாபர் மசூதி டிசம்பர் 6. 1992 அன்று பயங்கரவாத கும்பலால் பட்டம் பகலில் இடித்து தள்ளப்பட்டது. அந்த நாளை பயங்கரவாத எதிர்ப்பு நாளாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கடைப்பிடித்து வருவதாக தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் பெண்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • 6 முதல் 9-ம் வகுப்பு மாணவ, மாணவி யர்கள் பங்கேற்றனர்
    • 2-ம் இடம் பிடித்த மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் கடத்தூர் வட்டார அளவிலான பள்ளி மாணவர்களுக்கான 2-ம் பருவ மன்ற செயல்பாடு களுக்கான போட்டிகள் நடைபெற்றது.

    இதில் இலக்கிய மன்றம், வானவில் மன்றம், சிறார் திரைப்படம் மற்றும் வினாடி வினா ஆகிய தலைப்புகளின் கீழ் 10 போட்டிகள் நடை பெற்றது. இந்நிகழ்வில் கடத்தூர் வட்டாரத்தில் இருந்து நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி களில் பயிலும் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவ, மாணவி யர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் 30 மாணவர்கள் வீதம் 32 பள்ளிகளில் இருந்து சுமார் 720-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

    போட்டிகளில் முதல் மற்றும் 2-ம் இடம் பிடித்த மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இந்த மன்ற செயல்பாடுகளுக்கான போட்டிகளை பள்ளி தலைமை ஆசிரியர் மணி, வட்டார கல்வி அலுவலர் கள் மகேந்திரன், முருகன், மேற்பார்வை யாளர் விஜய குமார் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் நடுவர்களாக இருந்து நடத்தி வைத்தனர்.

    • திறனாய்வு தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடந்தது.
    • 2 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை தமிழக அரசால் வழங்கப்படும்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்ட கல்வி துறை சார்பில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கான திறனாய்வு தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடந்தது.

    இதில் நத்தமேடு அரசு மேல்நிலைப்பள்ளி மாண வர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார். இதில் அப்பள்ளியை சேர்ந்த சிவசங்கரி, பிரிய தர்ஷினி, நதியா, பிரியங்கா ஆகிய 4 மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

    ஒவ்வொரு மாணவிக்கும் மாதம் ரூ.1500 வீதம் 12-ம் வகுப்பு முடிக்கும் வரை 2 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை தமிழக அரசால் வழங்கப்படும்.

    வெற்றி பெற்ற மாணவி களை பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவிந்தராசு, தேர்வு பொறுப்பாசிரியர் செந்தில் அனைத்து ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.

    • வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

     தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பருவதன அள்ளி, அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (21). கொத்தனார் தொழில் செய்து வருகிறார். இவரும் சரண்யா (20) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இருவருக்கும் ஒரு மகள் உள்ள நிலையில் கடந்த மாதம் 11-ம் தேதி மாலை சந்தோஷ் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை..புகாரின் பேரில் பென்னா கரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதேபோல் பாலக்கோடு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது பட்டதாரி பெண். இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் தீபாவளிக்கு வீட்டிற்கு வந்த சிறுமி கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

    நேற்று முன்தினம் சிறுமியின் தாய் ஏரி வேலைக்கு சென்றவர் மாலை வீட்டில் வந்து பார்த்தபோது மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  இது குறித்து தாய் மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அதேபோல் பாப்பா ரப்பட்டி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகலா (53). இவரது மகள் தேவதர்ஷினி (23) . சசிகலா பாப்பாரப்பட்டி துவக்க பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தேவ தர்ஷினி எம். எஸ்.சி, பி.எட் முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    நேற்று முன்தினம் தேவதர்ஷினி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை வலை வீசி தேடி வருகின்றனர்.

    ×