search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    விதிமுறைகளை மீறி இயங்கும் கியாஸ் குடோனால் பொதுமக்கள் அவதி
    X

    விதிமுறைகளை மீறி இயங்கும் கியாஸ் குடோனால் பொதுமக்கள் அவதி

    • விபத்து ஏற்படும் வகையில் 100-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வைத்து உள்ளனர்.
    • நடவடிக்கை எடுக்க ேகாரி வட்டாட்சியரிடம் புகார் மனு

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு குடியிருப்பு பகுதியில் சுமார் 200- க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பாலக்கோடு - பெல்ரம்பட்டி பிரதான சாலை ஓரம் தனியார் கேஸ் ஏெஜன்சி கட்டிடத்தில் விபத்து ஏற்படும் வகையில் 100-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வைத்து உள்ளனர்.

    மேலும் விதிமுறைகளை மீறி ஓட்டல் உள்ளிட்ட கடைக்காரர்களுக்கு கேஸ் கிலோ கணக்கில் சில்லறை விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு விற்பனை செய்யும்போது பாதுகாப்பற்ற முறையில் சிலிண்டர்களை நிரப்புவதால் சிலிண்டர்கள் வெடிக்கும் அபாயம் உள்ளது.

    மேலும் பகல், இரவு நேரங்களில் அடிக்கடி காதை பிளக்கும் அளவிற்கு சத்தம் வருவதால், குழந்தைகள், முதல் முதியவர்கள் வரை பெரும் சிரமத்திற்க்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கேஸ் குடோனை இப்பகுதியில் இருந்து அப்புறபடுத்த கோரி பாலக்கோடு வட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

    புகாரை பெற்று கொண்ட வட்டாட்சியர் ஆறுமுகம் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலருக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்தார்.

    Next Story
    ×