search icon
என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • கல்லாவி சாலையில் நடந்து சென்றார்.
    • இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக கோபால் மீது மோதியது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அருர் அருகே உள்ள பொண்ணா கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 85).விவசாயி. கடந்த 18-ம் தேதி மொரப்பூர்-கல்லாவி சாலையில் நடந்து சென்றார்.அப்போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக கோபால் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார்.

    அக்கம்,பக்கத்தினர் இவரை மீட்டு சிகிச்சைக்சைகாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வந்த கோபால் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அவருடைய மகன் ரவி கொடுத்த புகாரின் பேரில் மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எடப்பாடி பழனிசாமி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்
    • சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என கூறினார்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல் இல்ல திருமண விழா தருமபுரியில் நடைபெற்றது. திருமண விழாவில் எஸ்.ஆர்.வெற்றிவேல் அனை வரையும் வரவேற்றார். விழாவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு டாக்டர் ரேணுகாதேவி, டாக்டர் ஜே.டி. ஆலன் திலக் ஆகியோருக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். இதைத்தொடர்ந்து 100 ஜோடிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

    இந்த விழாவில் அ.தி.மு.க. பொதுச்செய லாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர்.,ஜெயல லிதாவின் அருள் ஆசியுடன் இந்த திருமண விழா நடைபெற்றுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. அரங்க நாதன் எம்.ஜி.ஆரின் அன்பை பெற்றவர். தருமபுரியில் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் பொறுப்புகளை வகித்தவர். அவருடைய மகன் எஸ்.ஆர். வெற்றி வேல் அ.தி.மு.க.வில் பல ஆண்டுகளாக கட்சிப் பணியாற்றி வருபவர். தருமபுரி நகர செயலாளர், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்பு களை வகித்தவர்.

    தனது மகளின் திரும ணத்தோடு 100 ஜோடி களுக்கு திரும ணத்தை அவர் நடத்தி இருப்பது பாராட்டு க்குரியது. இந்த திருமண ஜோடிகள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். மணமகனின் தந்தை ஆர்.ஜே.கே.திலக் எம்.ஜி.ஆர்.காலத்தில் இருந்து அ.தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருபவர். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி அமையும். தமிழகத்தில் எப்போது எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    • அரங்குகளை பார்வையிட்டு துண்டு பிரசுரங்களை வழங் கினார்.
    • தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    தருமபுரி,

    2023- 2024 ம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து சிறுதானிய விழிப்புணர்வு மற்றும் சர்வதேச சிறுதானிய திருவிழாவை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்து கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது;-

    2023-2024ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொது மக்களா கிய நுகர்வோர்களிடையே பாரம்பரிய உணவான சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சர்வதேச சிறுதா னிய திருவிழா இன்று தருமபுரி மாவட் டத்தில் கொண்டாடப்படுகிறது.

    மேலும் சிறுதானியங்கள் முக்கியதுவம் குறித்து கண்காட்சி அரங்குகள் அமைத்து, அனைத்து வகையான பாராம்பரிய சிறுதானிய சிறப்புகள் தொடர்பான விழிப்பு ணர்வு தகவல்கள் வழங்கி பல்வகை சிறுதானிய உணவுகளை தயார் செய்து அச்சிறுதானியத்தின் நன்மைகள் குறித்து குறிப்புக ளுடன் நுகர்வோ ராகிய பொது மக்களின் பார்வைக்கு வைத்து பள்ளி, கல்லூரி மாணவர்க ளை கொண்டு விநியோகம் செய்து நேரடி விளக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நம் முன்னோர்களால் ஆதிகாலத்திலிருந்தே உண்ணப்பட்டு வந்த ஆரோக்கியமான உணவில் முதல் இடத்தைப் பிடிப்ப வை சிறுதானிய வகைக ளான குதிரைவாலி, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, கம்பு, பனிவரகு, சோளம் போன்றவைதான். எனவேஇந்தியாவின் பாரம்பரியமிக்க சிறுதானிய வகைகளை உலக மக்களி டையே பிரபலப்படுத்தும் விதமாக 193 ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகள் இந்தத் தீர்மா னத்தை ஒரு மனதாக ஆதரித்ததால் 2023-ஆம் ஆண்டை சிறுதானியங்க ளுக்கான சர்வதேச ஆண்டாக ஐ.நா. அறிவித்திருக்கிறது.

    உடலுக்கு நல்லது என்று பல உணவு வகைக ளைப் பயன்படுத்தும் நாம்சிறுதானிய உணவு களை உண்பதைக் காலப் போக்கில் மறந்துவிட் டோம். ஆரோக்கி யத்தைப் பேணுவதற்குத் தேவை யான அனைத்து சத்துக்க ளும் சிறுதானி யங்களில் உள்ளது. சிறுதானியங்க ளில் நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் அதிகமாகக் காணப்படு வதால் நாம் உண்ணும்போது நம் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது.

    சிறுதானியங்களில் சத்துக்களுடன் பல மருத்து வக் குணம் கொண்ட நுண் ணுயிர் எதிர்ப்பு வேதிப் பொருட்களும் ஆக்சிஜ னேற்ற எதிர்ப் பொருட்க ளும் உள்ளன. சிறுதானி யங்களில் உள்ள கிளை சிமிக் இன் டெக்ஸ் சர்க்க ரை நோயாளிக ளுக்குச்சிறந்தது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சி யில் மாவட்ட வருவாய் அலு வலர் செ.பால்பி ரின்ஸ்லி ராஜ்குமார், தமிழ் நாடு நுகர்ப்பொருள் வாணி பக் கழக மண்டல மேலாளார் தேன்மொழி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர் சு.இராமதாஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்தடங்கம் பெ.சுப்பரமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  

    • சகாதேவன் தன்னை மிரட்டி பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்தார்.
    • போலீசார் சகாதேவனை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் சகாதவேன் புகார் கொடுக்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் நல உறுப்பினரிடம் அளித்த புகாரில் சகாதேவன் தன்னை மிரட்டி பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்தார்.

    இதன் அடிப்படையில் குழந்தைகள் நல உறுப்பினர்கள் பென்னாகரம் நீதிமன்றத்தை நாடினர். பென்னாகரம் குற்றவியல் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏரியூர் போலீசார் மற்றும் பென்னாகரம் மகளிர் போலீசார் சகாதேவனை போக்சோ வழக்கில் கைது செய்து தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் உதவி ஆய்வாளர் சகாதவேன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • தருமபுரி அருகே தபால் ஊழியர் மாயம் ஆனார்.
    • மனைவி போலிசீல் புகார்

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள பஞ்சப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் ராஜாராம்(46) இவர் இவருக்கு திருமணம் ஆகி அம்பிகா(36) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜாராம் நம்மாண்டஅள்ளியில் உள்ள தபால் நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    ராஜாராமுக்கும் அவரது மனைவி அம்பிகாவிற்கும் விவசாயம் செய்ய வாங்கிய ரூ. 10 லட்சம் தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 17ந்தேதி ராஜாராம் வீட்டில் இருந்து தபால் அலுவலகம் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனுக்கு போன் செய்து பார்த்தபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    அவரை பல இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் இல்லை தெரிகிறது. இது குறித்து ராஜாராம் மனைவி அம்பிகா அளித்த புகாரின் பேரில் பஞ்சப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தருமபுரி அருகே மனநலம் பாதிக்கப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் விசாரணை

    தருமபுரி மாவட்டம், கே.நடுஅள்ளி அருகே உள்ள மாரியம்மன் கோவில் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 45). சற்று மனநலம் பாதிக்கப் பட்டவரான இவர் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    இதனை கண்ட உறவி–னர்கள் உடனே அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற னர். அப்போது அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தருமபுரி அருகே தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • 35 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஒட்டப்பட்டி பொதுப் பணித்துறை காலனி பகுதிகளில் தீபாவளிக்கு முன்பு தொடர்ந்து 2 வீடுகள் உடைக்கப்பட்டு சுமார் 35 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. இதுகுறித்து அதியமான் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான பதிவுகளை வைத்து விசாரணை செய்து வந்தனர். 

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சார்ந்த திருமால் (வயது37) என்பவரும், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சார்ந்த முத்துபாலன் (28) ஆகிய இருவரும் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

    கைதான 2 பேரிடம் போலீசார் விசாரித்ததில், இவர்கள் இருவரும் சிறையில் இருக்கும் போது நண்பர்களாக இருந்துள்ளனர். பின்னர் வெளியில் வந்ததும் ஒரு வழக்கில் கையெழுத்திட பஸ்சில் செல்லும்போது தருமபுரியில் உள்ள அதியமான்கோட்டை பகுதியில் நோட்டமிட்டு வந்துள்ளார். பின்னர் தனது நண்பரான முத்து பாலனுக்கு தகவல் தெரிவித்து தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதும், அதிமான் கோட்டையில் பதியப்பட்ட 6 கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து கைதான 2 பேரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 35 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் தருமபுரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து தருமபுரி கிளைச் சிறையில் போலீசார் அடைத்தனர்.

    • தருமபுரி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • ஆர். டி.ஓ விசாரணை நடக்கிறது.

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி வயது (வயது 48). இவர் தி.மு.க. பிரகமுரான இவருக்கு மோகனப்பிரியா (20) என்ற மகளும் நவீன்குமார் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் மோகனப்பிரியா, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கொலசனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் தருமன் என்கிற தருமலிங்கத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் தருமன், திருமணம் ஆனதிலிருந்து தினமும் குடித்துவிட்டு வந்து மோகன பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி இது போன்ற பிரச்சனைகளால் மோகனப்பிரியா தனது தாய் வீட்டிற்கு கோபித்து கொண்டு செல்வதும், மீண்டும் தருமனின் பெற்றோர்கள் சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தி அழைத்து வருவதுமாக இருந்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மோகன பிரியா, தனது தாய்க்கு போன் செய்து தருமன் குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டு வருகிறார். இங்கே என்னால் வாழ முடியாது வீட்டிற்கு வருகிறேன் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று மோகனப்பிரியாவின் பெற்றோர்கள் நேரில் சென்று சமாதானம் பேச சென்றுள்ளனர். அப்போது தருமன் தகாத வார்த்தைகளால் திட்டியதை அடுத்து மோகன பிரியாவின் பெற்றோர்கள் சென்று விட்டனர்.

    இதைத்தொடர்ந்து மாலை 3 மணிக்கு மேல் மோகன பிரியாவின் பெற்றோருக்கு போனில் உங்கள் மகள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மோகனபிரியாவின் பெற்றோர்கள் வந்து பார்த்தபோது தனது மகள் பிணமாக கிடந்தார். இதுகுறித்து முத்துசாமி பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார்தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு 2 ஆண்டுகள் ஆனநிலையில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தருமபுரி ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தருமபுரி அருகே கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் பெண் போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    தருமபுரி மாவட்டம் செட்டிக்கரை அருகேயுள்ள பள்ளக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி சரோஜா.

    இவர் தனது குடும்பத்தினருடன் இன்று காலை 11 மணியளவில் தருமபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

    அப்போது திடீரென்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனது குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். அப்போது சரோஜா மற்றும் அவரது குடும்பத்தினர் கூறியதாவது:-

    தருமபுரி மாவட்டம் விருப்பாட்சிபுரம் அருகே–யுள்ள கோடிகொட்டாய் கிராமத்தை சேர்்ந்தவர் எனது தந்தை பெருமாள். அவருக்கு 5 குழந்தைகளில் நான் 3-வதாக பிறந்தேன். என்னை பள்ளக் கொல்லையைச் சேர்ந்த சின்ன–சாமி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்த னர். என் தந்தைக்கு 3 மகன்களும் 2 மகள்களும் வாரிசுதாரர்கள். இதில் தந்தை பெருமாள், தாய் ராஜம்மாள், அண்ணன் பச்சியப்பன் மற்றும் அக்கா ராணி ஆகியோர் இறந்து விட்டனர்.

    இந்நிலையில் குடு்ம்ப சொத்தை அபகரிக்க வேண்டும் என்று ஆசை கொண்ட எனது தம்பிகள் மாதையன், மாரிமுத்து, மற்றும் அண்ணன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் போலியாக வாரிசு சான்று தயாரித்து தந்தை பெயரில் உள்ள குடும்ப சொத்தை 5 பத்திரங்களாக பதிவு செய்து உள்ளனர்.

    என்னையும், இறந்து போன தனது அக்கா ராணியை தவிர்த்து விட்டு என் தந்தைக்கு 3 மகன்கள் தான் உள்ளனர் என்று போலியாக வாரிசு சான்று பெற்று உள்ளனர். அதன் மூலம் எங்களது சொத்துகளை விற்றுவிட்டனர்.

    ஆகவே போலியான சான்று மூலம் குடும்ப சொத்தை அபகரித்து இருக்கும் எனது தம்பிகள் மற்றும் அண்ணன் குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டாட்சியார் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கா–வில்லை. எனவே, போலி வாரிசு சான்று மூலம் சொத்தை அபகரித்த சகோதரர்கள், அண்ணன் குடும்பத்தினர், போலி வாரிசு சான்று வழங்கிய அதிகாரிகள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடு படுவதாக தெரிவித்தனர்.

    இது குறித்து போலீசார் தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களை ககெலக்டரிடம் மனு கொடுக்குமாறு அறிவுறுத்தி னர். அதன்பின்னர் சரோஜா தனது குடும்பத்தினருடன் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவின் மீது கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன் பின்னர் அவர்கள் அங்கி–ருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • தருமபுரி அருகே ஆண் சிசு திடீர் என்று உயிரிழந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பூனையானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் பாக்கியம் (வயது 19) என்பவருக்கும், புதுக்கோட்டை மாவட்டம் கந்தவகோட்டை அடுத்த சுந்தரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமாருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இவர்களுக்கு கடந்த அக்டோபர் 20-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நேற்று தாய் பாக்கியம் குழந்தைக்கு பால் கொடுக்கும் போது திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது என தெரிவித்தனர். குழந்தை பிறந்து இரண்டு மாதத்தில் இருந்ததால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அ.தி.மு.க இரட்டை வேடம் போடாமல் தனித்தன்மையுடன் இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.
    • கவர்னர் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பதுதான் விதி.

    தருமபுரியில் நடைபெற்ற அதி.மு.க.பிரமுகா் இல்லத்திருமணவிழாவில் கலந்துக்கொண்ட அதிமுகவை சோ்ந்த முன்னாள் அமைச்சா் ஜெயக்குமார் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவா் பேசியதாவது:-

    தி.மு.க. என்பது முரண்பாடு உடைய ஒட்டு மொத்த உருவம். சட்டமன்றத்தில் கவர்னர் தேவை இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். தி.மு.க.விற்கு ஒத்திசை பாடி எல்லோவற்றுக்கும் தலையாட்டுகின்ற கவர்னர் இருந்தால் நாட்டுக்கு தேவை என்பார்கள். 17 ஆண்டுகள் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து மத்தியில் ஆட்சியில் இருந்தீர்கள். சர்க்காரியா ஒரு கமிஷனை நியமனம் செய்து மாநிலங்களில் இருந்து கருத்து கேட்டு கவர்னருக்கு என்னென்ன அதிகாரம் வேண்டும் என்பதை வரைமுறைப்படுத்தினார். அமல்படுத்தியிருந்தாலே போதும் பிரச்சனை வந்திருக்காது.

    17ஆண்டுகள் காலம் ஆட்சியில் இருந்து விட்டு அப்பொழுது அமல்படுத்தியிருந்தால் பிரச்சனை இல்லை. கவர்னருக்கும், அரசுக்கும் மோதல் போக்கு உருவாகி இருக்காது. கவர்னர் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பதுதான் விதி அதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் தி.மு.க. எதிர்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு நிலைப்பாடும், ஆளுங்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு நிலைப்பாடும் என தேவைக்கு ஏற்றார் போல் பச்சோந்தி தனமாக முறைகளை கையாள்வதில் கில்லாடிகள் இந்த தி.மு.க. அரசு.

    சட்டமன்றத்தில் பூனை குட்டி வெளியே வந்து விட்டது என்று துரைமுருகன் பேசினாரே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தி.மு.க. 17 ஆண்டுகள் மத்தியில் இருந்தது அப்பொழுது பூனை குட்டிகள் எல்லாம் என்ன செய்தது. அப்போது அந்த பூனை குட்டிகள் எதுவும் செய்யவில்லை. அதிகாரத்தில் இருக்கும் பொழுது மாநில சுயாட்சிக்கு குரல் கொடுக்காமல் மாநில உரிமைக்கு குரல் கொடுக்காமல் தனது குடும்ப நலன்களுக்காக உரிமையை விற்றவர்கள் பேசலாமா?, இவர்களைப் போல நாங்கள் இரட்டை வேடம் போடுவது இல்லை தனித் தன்மையுடன் தான் இருக்கிறோம். இவ்வாறு அதி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியின் போது தெரிவித்தார்.

    • தருமபுரி அருகே கிணற்றில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் உடல் மீட்கப்பட்டது.
    • போலீசார் தீவிர விசாரணை

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள நாசன்கொட்டாய் பகுதியை சேர்ந்த சின்னப்பையன் என்பவர், தனது காணாமல் போன கன்றுக்குட்டியைப் தேடிச்சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் உள்ள கிணற்றில் ஆண் சடலம் ஒன்று மிதந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் அரூர் போலீசார் தீயணைப்பு மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்தனர்.

    இதனையடுத்து தீயணைப்புறையினர் கிணற்றுக்குள் இருந்த உடலை மீட்டனர். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் 5 நாட்களுக்கு முன்பே கிணற்றில் விழுந்து இறந்திருக்கலாம் என்று தெரிவித்தனர். சடலத்தை மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்தவர் குறித்து, விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் கொலையா தற்கொலையா விசாரித்து வருகின்றனர்.

    ×