search icon
என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • தருமபுரியில் 4 மணி நேரத்தில் 24 லட்சம் விதைபந்துகள் தயாரித்து அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • ஆல், அரசு, அத்தி, மூங்கில், புளி, வில்வம் மற்றும் பூவரசு போன்ற விதைகளால் உருவாக்கப்பட்டது.

    பள்ளி மாணவர்களிடம் மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் தருமபுரி மாவட்டம் குண்டல்பட்டி அருகே உள்ள பச்சமுத்து கல்வி குழுமங்களின் சார்பில் நேற்று மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவிகள் 10 ஆயிரம் போ் இணைந்து 4 மணி நேரத்தில் 25 லட்சம் விதைப்பந்துகளை தயாரித்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

    சாதனையை அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட எலைட் வேல்டு ரெக்கார்டு அமைப்பினர் இந்த சாதனையை பதிவு செய்து உலக சாதனைக்கான சான்றிதழ்களை வழங்கினர். இச்சாதனை நிகழ்ச்சியில் பாப்பாரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த மாற்றுத்திறனாளி மாணவி சினேகா கலந்து கொண்டு சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு விதை பந்துகளை தயார் செய்தார். சக மாணவி களோடு தானும் விதை பந்துகளை தயாரித்தது மகிழ்ச்சி தருவதாக தெரிவித்தார்.

    ஆல், அரசு, அத்தி, மூங்கில், புளி, வில்வம் மற்றும் பூவரசு போன்ற விதைகளால் உருவாக்கப் பட்ட விதைப்பந்துகளை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்படும் என கல்வி குழும தலைவா் பாஸ்கா் தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • பாலக்கோடு இனிப்பு கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு நடத்தினர்.
    • ரூ. 1000 வீதம் 2 கடைகளுக்கு உடனடி அபரா தமும் விதிக்க பட்டது.

    தருமபுரி மாவட்டம் முழுவதும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பு இடங்கள், விற்பனை நிலையங்கள் மற்றும் பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு விதிமுறைகள்படி நடை முறை பின்பற்றப்படுகின்றனவா? அப்படி இல்லாத பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

    அதன் தொடர்ச்சியாக பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, மற்றும் மாரண்டஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இனிப்பு, காரம் தயாரிப்பு கூடங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் ஆய்வு செய்தார். ஆய்வில் ஒரு சில தயாரிப்பு கூடங்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் இருந்து அதிக நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட காரம் மற்றும் இனிப்பு அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் அச்சிடப்பட்ட செய்திதாள்களில் காட்சிப்படுத்தப்பட்டுருந்த எண்ணெய் பலகாரங்களை அப்புறப்படுத்தி , அச்சிடப்படாத பேப்பர்களில் காட்சிப்படுத்ததுதல், விநியோகித்தல் மற்றும் பொட்டலம் இடுதல் வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.

    பாலக்கோட்டில் ஒர் தயாரிப்பு நிலையத்தில் முந்திரி உள்ளிட்ட சில மூலப் பொருட்கள் உரிய லேபிள் நடைமுறை பின்பற்றாத அதாவது உரிய விபரங்கள் அச்சிடாத பாக்கெட்டுகளை வாங்குவது தவிர்க்க வலியுறுத்தி மேம்பாட்டு அறிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேற்படி கடைக்காரர்களுக்கு நியமன அலுவலர் பரிந்துரை பேரில் தலா ரூ. 1000 வீதம் 2 கடைகளுக்கு உடனடி அபரா தமும் விதிக்க பட்டது.     

    • திறன்பேசி தொழில்நுட்பவியலாளர் உற்பத்தி ஊழியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வேண்டுகோள் விடுக்கபட்டுள்ளது.
    • இப்பயிற்சிக்கான கால அளவு 12 நாட்கள் ஆகும்

    தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

    தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்கு டியினர் இனைத்தைச் சார்ந்த இளை ஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது சென்னையில் உள்ள ஸ்மைல் ஸ்கில் இந்தியா பயிற்சி நிலையத்தின் மூலமாக திறன்பேசி தொழில்நுட்பவியலாளர் பெண்களுக்கும் மற்றும் உற்பத்தி ஊழியர் பயிற்சி ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் போன்ற பயிற்சியினை தாட்கோ சார்பாக அளிக்கப்படவுள்ளது.

    இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும். பத்தாம் வகுப்பு படித்த 18 முதல் 35 வயது வரை உள்ள மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 12 நாட்கள் ஆகும். மேலும் சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும் இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் மாணாக்கர்களுக்கு அங்கீக ரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.

    மேலும் இப்பயிற்சியினை பெற்றவர்கள் போன்ற தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்ப யிற்சியில் வெற்றி கரமாக முடிக்கும் மாணாக்கர்களுக்கு ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.18,00 முதல் ரூ.18,500 வரை பெற வழி வகை செய்யப்படும்.

    இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான தங்கும் விடுதி மற்றும் பயிற்சி கட்டணம் தாட்கோ வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், எண்-3, சாலை விநாயகர் கோவில் ரோடு, விருப்பாட்சிப்புரம், தருமபுரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு வெள்ளை முருகனின் முதுகு பகுதியில் குத்தினார்.
    • பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே சொத்து தகராறு காரணமாக, தனது சொந்த அண்ணனை மச்சானுடன் சேர்ந்து கொண்டு கத்தியால் குத்தி கொல்ல முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மருக்காலம் பட்டியை சேர்ந்தவர் வேடியப்பன். விவசாயியான இவருக்கு வெள்ளை முருகன் (வயது 35), காந்தி (31) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    இவர்கள் இருவருக்கும் சொந்தமான வீடு, நிலம் உள்ளது.

    இதை பிரித்துக் கொள்வதில் இருவருக்கும் இடையே அடிக்கடி வாய் தகராறு இருந்து வந்தது. இதனால் கடந்த ஆறு வருடங்களாக தீர்வு காணாமல் பிரச்சனை நீடித்துள்ளது.

    இந்நிலையில் இன்று காலை ஒரே இடத்தில் இருவரது வீடும் உள்ளதால் அண்ணன், தம்பி இடையே மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது அங்கு வந்த காந்தியின் மச்சான் பூங்குன்றம் (32) என்பவர் வெள்ளை முருகனின் தலை, கால் பகுதிகளை சரமாரியாக தாக்கினார்.

    மேலும், ஆத்திரமடைந்த காந்தியும் தனது பங்குக்கு அண்ணன் வெள்ளை முருகனை தரையில் இருந்த கற்களை கொண்டும் கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது அவர், மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு வெள்ளை முருகனின் முதுகு பகுதியில் குத்தினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வெள்ளை முருகனின் மனைவி சந்தியா தடுக்க வந்த வந்தபோது அவரையும் காந்தி சரமாரியாக தாக்கியுள்ளார்.

    இதில் காயமடைந்த வெள்ளை முருகன், அவரது மனைவி சந்தியா ஆகிய 2 பேரையும் உடனடியாக உறவினர்கள் அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

    இச்சம்பவம் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சொத்து தகராறில் அண்ணனை, தம்பி கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.
    • மரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்தது தெரிய வந்தது.

    தொப்பூர்:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே டொக்குபோதனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட தின்ன கொல்லை கிராமத்தில், வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.

    இந்த நிலத்தில், சம்பவத்தன்று சட்ட விரோதமாக மர்ம நபர்கள் எவ்வித அனுமதியும் இல்லாமல், மரம் அறுக்கும் எந்திரங்கள் கொண்டு, டன் கணக்கிலான, மரங்களை வெட்டி கடத்துவதாக, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இந்த தகவலின்பேரில், கிராம நிர்வாக அலுவலர் ராமசுந்தரம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, டன் கணக்கில் வெட்டப்பட்ட மரங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    இந்த விசாரணையில், அனுமன் நகரை சேர்ந்த தொழிலாளியான சண்முகம் (வயது50) என்பவர், சட்ட விரோதமாக, அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த டன் கணக்கிலான மரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்தது தெரிய வந்தது.

    பின்னர் மரங்களை வெட்டி கடத்த முயன்ற விவகாரம் தொடர்பாக, சம்மந்தப்பட்ட சண்முகத்திற்கு, ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதித்து, வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற் கொண்டனர்.

    • தொடர் மழையால் பூக்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் பலாயிரம் ஏக்கரில் விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    குறிப்பாக பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதி மற்றும் பென்னாகரம், ஜருகு, சாமி செட்டிபட்டி, கெட்டுப்பட்டி, தொப்பூர், கம்பைநல்லூர், மொரப்பூர், மூக்கனூர், உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகபடியாக சாமந்தி, சம்பங்கி, பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

    தற்போது சாமந்திப்பூ சீசன் என்பதாலும் வரத்து அதிகரித்து உள்ளதால் கடந்த ஒரு வாரமாக சாமந்தி கிலோ ரூ.50-க்கும் சம்பங்கி கிலோ ரூ.30 என விற்பனை செய்யப்பட்டது.

    சாமந்தி, சம்பங்கி வரத்து அதிகரிப்பால் பூ மார்க்கெட்டில் விற்பனையாகாமல் தேக்க நிலை உள்ளதால் பறித்த பூக்களை விவசாயிகள் விலையின்றி ரோடோரங்களில் கொட்டி செல்கின்றனர்.

    இந்த நிலையில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை என்பதால் பூக்களின் விலை உயிரும் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இன்று சாமந்திப்பூ கிலோ ரூ.10 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டது.

    சம்பங்கி கிலோ ரூ. 20-க்கு விற்பனை செய்யப்பட்டதால் அறுவடைக் கூலி கூட கிடைக்கவில்லை என விவசாயிகள் ஆதங்கப்பட்டனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறும்போது தொடர் மழையால் பூக்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது. வரத்தும் அதிகரித்துள்ளது. இருந்தாலும் பூக்களில் மழை தண்ணீர் இறங்குவதால் பூக்கள் நனைந்து அதன் இதழ்கள் தொங்கி அதன் தன்மையிலிருந்து மாறுபட்டு அழுகி வருகிறது. மீதமுள்ள தரமான

    அறுவடை செய்த பூக்களை வாங்குவதற்கு வியாபாரிகள் வருவதில்லை கிலோ ரூ.10 முதல் ரூ.30-க்கு கூவி கூவி விற்பனை செய்யும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது என கவலையோடு தெரிவித்தனர்.

    இன்று தருமபுரி நகரப் பஸ் நிலையத்தில் இயங்க வரும் பூ மார்க்கெட்டில் சன்ன மல்லி ரூ.550, குண்டு மல்லி ரூ.400, காக்கட்ட ரூ.400, ஜாதி மல்லி ரூ.250, மூக்குத்தி பூ ரூ.300, பன்னீர் ரோஸ் ரூ.300, கோழி கொண்டை ரூ.20 என விற்பனை செய்யப்பட்டது.

    • தமிழகத்தில் கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
    • தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களின் சட்ட மசோதாக்கள் நிலுவையில் இருக்கிறது.

    அரூர்:

    தருமபுரி மாவட்டத்துக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அரூரில் செய்திகளை சந்தித்தார்.

    தருமபுரி மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு, புளி, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த பொருட்கள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன.

    வேளாண் விளைபொருள்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றவும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். சென்னை அதன் சுற்று வட்டாரப் பகுதியில் மட்டுமே தொழிற்சாலைகளை ஏற்படுத்துவதை தமிழக அரசு கைவிட வேண்டும்.

    தமிழகத்தில் கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் போதை ஒழிப்பு பிரிவுக்கு கூடுதலாக 18 ஆயிரம் போலீசார்களை பணியில் அமர்த்த வேண்டும். நீட் தேர்வில் விலக்கு கோரும் கோரிக்கையை அனைத்து கட்சிகளும் இணைந்து வலியுறுத்த வேண்டும். சித்தேரி, வத்தல்மலையை சுற்றுலா தலமாகவும், தீர்த்தமலையை ஆன்மீக தலமாகவும் தமிழக அரசு மாற்ற வேண்டும். தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் ரோப் கார் வசதி ஏற்படுத்த வேண்டும்.

    அரூரை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், காரல்மார்க்ஸ் ஆகியோர்தான் பா.ம.க.வின் முன்னோடிகள். எனவே, எங்கள் கட்சியின் வழிகாட்டிகள், முன்னோடிகளை எதிர்பவர்களை பா.ம.க. எதிர்க்கும். இந்தியாவில் சமூக நீதியை கொண்டு வந்தவர் தந்தை பெரியார். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கோவில் முன்பாக உள்ள பெரியார் சிலைகள் அகற்றப்படும் என மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். அவரது கருத்து எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. தமிழக கவர்னர் நடுநிலையாக செயல்பட வேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களின் சட்ட மசோதாக்கள் நிலுவையில் இருக்கிறது.

    தருமபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீர் திட்டம் வேண்டும் என்று கையெழுத்து இயக்கம் நடத்தியபோது சாதி, மதம், அரசியல் கட்சிகளை அப்பாற்பட்டு அனைவரும் ஒன்றிணைந்து திட்டத்தை நிறைவேற்றுவதற்காக கையெழுத்திட்டனர். 

    அதேபோல நீட் என்பது தமிழகத்தில் பொது பிரச்சனை ஆகையால் தி.மு.க.வின் நீட் எதிரான கையெழுத்து இயக்கத்திற்கு நாங்களும் ஆதரவு தருவோம் என்றும் நீட் தேர்வில் அரசியல் செய்யக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தந்தை பெரியார் இல்லை என்றால், தமிழகத்தில சமூகநீதி கிடையாது.
    • தந்தை பெரியார் பற்றி அண்ணாமலையோ, அவர் சார்ந்த கட்சிகளோ இழிவாக பேசக்கூடாது.

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஸ்ரீரங்கத்தில் பேசும்போது, கடவுளை நம்புபவர்கள் முட்டாள் என்பவர்களின் சிலை கோவில்களின் முன் இருந்து அகற்றப்படும். தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி வரும்போது, முதல் நடவடிக்கை இதுவாகத்தான் இருக்கும் என்றார். பின்னர், மதுரையில் பேசும்போதும் சிலை விவகாரத்தை கையில் எடுத்தார்.

    தொடர்ந்து பெரியார் குறித்த கருத்தை முன்வைக்கும் அண்ணாமலைக்கு அதிமுக, திமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பா.ம.க. கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

    தந்தை பெரியாரின் மண் இது. இந்த மண்ணில் இவ்வாறு பேசுவது தவறு. தந்தை பெரியால் இல்லை என்றால், தமிழகத்தில சமூகநீதி கிடையாது. தந்தை பெரியார் பற்றி அண்ணாமலையோ, அவர் சார்ந்த கட்சிகளோ இழிவாக பேசக்கூடாது. ஏனென்றால், எங்கள் கட்சியின் முன்னோடிகள்.

    எங்கள் கட்சியில் மூன்று பேரை முன்னோடியாக வைத்துள்ளோம். அவர்கள் அண்ணா, அம்பேத்கர், புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ் ஆவார்கள். மூன்று பேரை பற்றி யாராவது தவறாக பேசினால், நாங்களும் அமைதியாக இருக்கமாட்டோம்.

    இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

    • வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.
    • போராட்டத்திற்கு தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

    தருமபுரி:

    மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வு, காப்பீட்டு கட்டணம் உயர்வு, சுங்க கட்டணம் உயர்வு, காலாண்டு வரி உயர்வு, ஆன்லைன் அபராதம் ஆகியவற்றை உயர்த்தி உள்ளதால் இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.

    இந்த போராட்டத்திற்கு தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 3,500 லாரிகள் பங்கேற்கிறது. எனவே தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அந்தந்த பகுதிகளில் பாதுகாப்பாக லாரிகளை நிறுத்தி கொள்ளுமாறு தருமபுரி மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவரும், தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன மாநில துணைத் தலைவருமான நாட் டான் மாது தெரிவித்தார்.

    இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் குறிப்பிட்ட லாரிகளை தவிர மற்ற லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • தருமபுரி அருகே திருமணம் ஆன பெண் மாயமானார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகேயுள்ள குருக்கலையனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 38), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பவித்ரா (29). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத் தன்று பவித்ரா நெருப்பூரில் உள்ள ஏ.டி.எம்மில் பணம் எடுத்து வருவதாக அக்கம் பக்கத்தினரிடம் சொல்லி சென்று உள்ளார். மகன்கள் 3 பேரும் பள்ளிக்கு சென்று உள்ளனர். பின்னர் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்து அவர்கள் அம்மா பவித்ராவை தேடியுள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. அம்மாவை காணாது சிறுவர்கள் தவித்து போய் அழுது உள்ளனர்.

    இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் பெங்களூரூவில் தங்கி கட்டிட வேலை பார்த்து வரும் ஆறுமுகத்துக்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ஆறுமுகம், மனைவி பவித்ராவை உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடினார். அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் ஏரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒகேனக்கலில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
    • நீர் வரத்து 11 ஆயிரம் கன அடியாக சரிந்தது.

    தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிற நிலையில், தமிழக காவிரி கரையோர எல்லை பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகின்றன. இதனால் தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வ–ரத்தானது படிப்படியாக அதிகரித்து நேற்று வினாடிக்கு காலை 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீரென அதிகரித்த இந்த நீர்வரத்தானது மேலும் படிப்படியாக அதிகரித்து மாலை நிலவரப்படி வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. வனப்பகுதியிலும் காவிரி கரையோரங்களிலும் மழை யின் அளவு குறைந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது அதனைத் தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி 11 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து சரிய தொடங்கியுள்ளது. இந்த நீர்வரத்தால் ஐந்தருவி, சீனி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன.

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 8ஆயிரம் கன அடிக்கு கூடுதலாக தண்ணீர் வரத்து இருந்தால் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க தடை விதிப்பது வழக்கம். இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு சுமார் 11 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதன் காரணமாக தருமபுரி மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருதி பரிசல் இயக்குவதற்கு தடை விதித்துள்ளது. அருவிகள் மற்றும் பாதுகாப்பான காவிரி ஆற்றுப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிப்பதற்கு எவ்வித தடையும் இல்லை. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    தமிழக மற்றும் கர்நாடக எல்லைகளில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்க கூடும் எனக்கு மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே தீபாவளி தொடர் விடுமுறையை யொட்டி ஒகேனக்கலுக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தருமபுரி அருகே உணவில் விஷம் வைத்து பெண்ணை கொல்ல முயற்சி செய்தவருக்கு போலீசார் வலை வீச்சு
    • கடந்த 30 ஆண்டுகளாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே 30 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த பெண்ணை உணவில் விஷம் வைத்து கொல்ல முயன்றதாக வந்த புகாரின் பேரில் அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

    தருமபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிப்பட்டி அருகே உள்ள பூனையானூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணகி (வயது52). கூலி வேலை செய்து வருகின்றார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் இவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் கணவனைப் பிரிந்து தனிமையில் இருந்து வந்த கண்ணகிக்கும், அதே பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இருவரும் அதே பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு, வாய் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்த உணவை கண்ணகி சாப்பிடு வதற்காக தட்டில் போட்டுள்ளார், அப்போது உணவில் இருந்து விஷ வாடை வந்ததால் சந்தேகம் அடைந்த கண்ணகி சாப்பா ட்டுடன் பாப்பி ரெட்டிப்பட்டி போலீஸ் நிலையம் வந்து, தன்னுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த மனோகரன் என்னை கொலை செய்வதற்கு உணவில் விஷம் கலந்துள்ளதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் லதாவிடம் புகார் தெரிவித்தார்.

    அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். உணவில் விஷம் கலந்தது தொடர்பாக உணவு சோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளது. இதனை அறிந்த மனோகரன் தலை மறைவாக உள்ளார். தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த பெண்ணுக்கு உணவில் விஷம் வைத்துக் கொள்ள முயன்ற சம்பவம் அந்த பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×