search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓய்வூதியர்களுக்கு வீட்டுக்கே வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்
    X

    கோப்பு படம்

    ஓய்வூதியர்களுக்கு வீட்டுக்கே வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்

    • வயது முதிர்வு மற்றும் நோய் தாக்குதல் காரணமாக ஓய்வூதியர்கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை நேடியாக சென்று சமர்ப்பி க்க பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
    • இதனை தவிர்க்க இந்தியா போஸ்ட் பேமன்ஸ் வங்கி மூலம் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி உயிர்வாழ் சான்று வீடுக ளுக்கே சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது.

    தேனி:

    தமிழக அரசு ஓய்வூதி யர்கள், குடும்ப ஓய்வூதி யர்கள் ஆகியோர் உயிர்வாழ் சாற்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி தேனி மாவட்ட த்தில் 800 பேர் இந்த சான்றிதழை சமர்ப்பிக்காமல் உள்ளனர்.

    வயது முதிர்வு மற்றும் நோய் தாக்குதல் காரணமாக ஓய்வூதியர்கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை நேடியாக சென்று சமர்ப்பி க்க பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

    இதனை தவிர்க்க இந்தியா போஸ்ட் பேமன்ஸ் வங்கி மூலம் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி உயிர்வாழ் சான்று வீடுக ளுக்கே சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. இதற்கு கட்டணம் ரூ.70 என நிர்ணயிக்கப்பட்டு ள்ளது. தங்கள் வீட்டிற்கு வரும் தபால்காரரிடம் ஆதார் கார்டு, செல்போன் எண், பி.பி.ஓ.எண்., ஓய்வூதிய வங்கி கணக்கு விபரங்கள் ஆகியவற்றை தெரிவித்து தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்தால் சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்கப்படும்.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக செல்போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனங்களும் வழங்க ப்பட்டுள்ளன. எனவே ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு தபால் கோட்ட அதிகாரி தெரி வித்துள்ளார்.

    Next Story
    ×