search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
    X

    பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

    • கடந்த 14-ந்தேதி சீதளாதேவி மாரியம்மனுக்கு காப்பு கட்டி பக்தர்கள் விரதம் இருந்தனர்.‌
    • மாரியம்மனுக்கு பால், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோயில் அருகே நெடுவாசல் கிராமத்தில் உள்ள ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

    வேண்டிய வரத்தை அள்ளித்தரும் நெடுவாசல் சீதளாதேவி மாரியம்மன் கோவில் 20 -ம் ஆண்டு தீமிதி திருவிழாவை தொடர்ந்து கடந்த 14-ம் தேதி சீதளாதேவி மாரியம்மனுக்கு காப்பு கட்டி பக்தர்கள் விரதம் இருந்தனர்.

    இதனை தொடர்ந்து 15 ஆம் நாள் நேற்று கடலி ஆற்றாங்கரையில் இருந்து கரகம், பால் காவடி, அலகு காவடிகள் புறப்பட்டு, வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க முக்கிய வீதி வழியாக கோயிலை வந்தடைந்தது.

    சீதளாதேவி மாரியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

    இக்கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி தங்க ளது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    இதற்கான விழா ஏற்பாடுகளை நெடுவாசல், கொங்கராயன்மண்டபம், பட்டாவரம் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

    திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மா விளக்கு போட்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    இதில் பஞ்சா யத்தார்கள் , விழா குழுவி னர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×