search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டையில் தே.மு.தி.க.வினர்  சிறப்பு பூஜை
    X

    நிலக்கோட்டை நடராஜர் கோவிலில் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி பூஜை நடைபெற்றது.


    நிலக்கோட்டையில் தே.மு.தி.க.வினர் சிறப்பு பூஜை

    • தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார்.
    • அவர் விரைவில் குணமடைய நிலக்கோட்டையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை 4 ரோடு அருகே உள்ள நடராஜர் பெருமாள் கோவிலில் தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி சிறப்பு யாகம், பூஜை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜவகர் தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் பழனி, வெள்ளைச்சாமி, வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர்கள் கருத்தப்பாண்டி, மணி முருகன், மாவட்ட துணைச் செயலாளர்கள் மாசாணம், வித்யா முருகேந்திரன், நிலக்கோட்டை ஒன்றிய பொருளாளர் சிவா, முன்னாள் வத்தலகுண்டு ஒன்றிய செயலாளர் சேர்மன் ராஜா, ஒன்றிய அவைத்தலைவர் மணிகண்டன், நிலக்கோட்டை நகர செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×