search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. அரசை கண்டித்து கோவையில் 29-ந் தேதி 3 இடங்களில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
    X

    தி.மு.க. அரசை கண்டித்து கோவையில் 29-ந் தேதி 3 இடங்களில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

    • திமுக அரசு மக்கள் பணம் ரூ.3ஆயிரம் கோடியை மோசடி செய்துள்ளனர்.
    • அத்திக்கடவு அவினாசி திட்டத்தை 95 சதவீதம் பணி முடித்தும் இன்னும் தொடங்கவில்லை.

    கோவை,

    கள்ளச்சாராயம் சாவு, போதைப்பொருள் நடமாட்டம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்ற பிரச்சினைகளுக்காக தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் வருகிற 29-ந் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    கோவையில் 3 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது.

    கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி தலைமை தாங்கி பேசினார். அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க வருகிற 29-ந் தேதி கோவையில் வடக்கு மாவட்டம் சார்பில் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்திலும், மாநகர் மாவட்டம் சார்பில் செஞ்சிலுவை சங்கம் முன்பும், புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் பொள்ளாச்சியிலும் என 3 இடங்களில் 9 மணிக்கு கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்

    திமுக அரசு மக்கள் பணம் ரூ.3ஆயிரம் கோடியை மோசடி செய்துள்ளனர். மக்கள் விரோத திமுக ஆட்சியை பதவி விலக வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    இந்தியாவில் பல முதல்வர்கள் உள்ளனர். முதல்வர்களிலேயே எதுவும் தெரியாமல் இருக்கும் முதல்வர் தமிழக முதல்வர் தான்.முன்பு முதலீடுகளை ஈர்ப்பதற்காக துபாய் சென்றதாக தெரிவித்தனர். ஆனால் அப்போது எத்தனை முதலீடு வந்தது. ஒன்றும் வரவில்லை. இப்போது முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். எத்தனை முதலீடு வருகிறது என பார்ப்போம்.

    4 அரை ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது மக்களுக்காக எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வந்தது எடப்பாடியார் மட்டுமே. அத்திக்கடவு அவினாசி திட்டத்தை 95 சதவீதம் பணி முடித்தும் இன்னும் தொடங்கவில்லை. இப்போது ஸ்டாலின் தொடங்கும் திட்டங்கள் அனைத்தும் எடப்பாடி யாரால் கொண்டு வரப்ப ட்டது.

    தமிழகத்தில் கள்ளச்சாராயம், திருட்டு, மது விற்பனை, கஞ்சா, போதை பொருள் உள்ளிட்டவை சர்வசாதாரணமாக நடை பெறுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டு உள்ளது.

    நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக நாம் வெற்றி பெறுவோம்.இப்போது தேர்தல் வந்தாலும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் வெற்றி பெறுவார்.அதிமுக ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டது. இன்று திமுக ஆட்சியில் காவல்துறை அவர்களுக்கு சாதகமாகவே செயல்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி, எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி அருண்குமார், கே.ஆர்.ஜெயராம் ஏ.கே.செல்வராஜ், தாமோதரன், சூலூர் கந்தசாமி, அமுல் கந்தசாமி, புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செய லாளர் என்ஜினீயர் சந்திரசேகர் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    Next Story
    ×