என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேசிய கொடி ஏற்றும்படி தி.மு.க.தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்ல வேண்டும்- அண்ணாமலை
- வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும்.
- கல்லூரி மாணவர்களிடையே தேசிய பற்று குறித்து போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
ஆவடில்:
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி பா.ஜ.க. சார்பில் தேசிய கொடியை கையில் ஏந்தி விழிப்புணர்வு நடைபயணம் சென்னையை அடுத்த ஆவடியில் நடைபெற்றது.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற இந்த நடைபயணத்தில் கலந்து கொண்ட தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தேசிய கொடியை கையில் ஏந்தியபடி புதிய ராணுவ சாலையில் பேரணியாக நடந்து சென்றார்.
பின்னர் அங்கிருந்த காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது:
மக்கள் எழுச்சியுடன் தேசிய கொடியை கையில் ஏந்தி நடைபயணத்தை மேற்கொண்டுள்ளோம். தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களிடையே தேசிய பற்று குறித்து போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தேசிய கொடியை ஏற்றும் இயக்கத்தை முன்னெடுப்பது அவசியம். தமிழகத்தில் உள்ள வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடவேண்டும்.
அதேபோல் தி.மு.க. தொண்டர்களையும் தேசிய கொடி ஏற்றும்படி மு.க.ஸ்டாலின் சொல்ல வேண்டும். பால்வளத்துறையில் ஊழல் நடைபெற்று வருகிறது. அமைச்சர் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.