என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காவேரிபட்டணத்தில் தி.மு.க.வின் 2-ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
- திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்திற்கு தி.மு.க. தலைமை கழக பேச்சாளர்கள் வயலூர் கிருஷ்ணமூர்த்தி, பையூர் இளையராஜா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரி ப்பட்டணம் அகரம் கூட்ரோட்டில் கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவை தலை வர் தட்ர அள்ளி நாகராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் காவேரி ப்பட்டணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.
கூட்டத்திற்கு நாகரசம்பட்டி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, அகரம் ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தி, ரமேஷ், சண்முகம், கோவிந்தசாமி, பெரியசாமி, சுப்பிரமணி, தங்கராஜ், துரைசாமி, மணியரசு, குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கு தி.மு.க. தலைமை கழக பேச்சாளர்கள் வயலூர் கிருஷ்ணமூர்த்தி, பையூர் இளையராஜா ஆகியோர் கலந்துகொண்டு திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார் .
கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் நாகராசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் விமலா மணி , மாதவி முருகேசன், மகேஸ்வரி சங்கர், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ் நன்றி கூறினார்.