search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் தங்கும் விடுதிகளில் திருமண வரவேற்பு விழா நடத்தக்கூடாது-நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
    X

    ஊட்டியில் தங்கும் விடுதிகளில் திருமண வரவேற்பு விழா நடத்தக்கூடாது-நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

    • விடுமுறை நாட்களில் 20 ஆயிரம் பேரும் வந்து செல்கிறார்கள்.
    • திருவிழா காலங்களில் 50 டன் வரையும் குப்பை சேகரமாகிறது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வழக்கமான நாட்களில் 10 ஆயிரம் பேரும், வார விடுமுறை நாட்களில் 20 ஆயிரம் பேரும் வந்து செல்கிறார்கள்.

    ஊட்டியில் 500-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளும், 3,436 நிறுவனங்களும் உள்ளன. வழக்கமாக ஊட்டியில் தினமும் 36 டன்னும், திருவிழா காலங்களில் 50 டன் வரையும் குப்பை சேகரமாகிறது.

    இதில் 9 டன் நகராட்சி மார்க்கெட்டில் இருந்து வருகிறது. ஊட்டி நகராட்சியில் லாரி மூலமாகவும், வார்டு வாரியாக பணியாளர்கள் வாகனங்களில் சென்றும் குப்பையை சேகரித்து வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து தீட்டுக்கல் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு, மக்கும் குப்பை உரமாக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், திருமண மண்டபங்களில் வரவேற்ப விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதால் கூடுதல் செலவாகும் நிலையில், தனியார் காட்டேஜ்களில் திருமண வரவேற்பு விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    இதனால் குப்பை அதிகளவில் சேர்வதுடன், நகராட்சி பணியாளர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே தனியார் தங்கும் விடுதிகளில் திருமண வரவேற்பு விழா நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் எம்.காந்திராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியாதவாது:-

    2016-ம் ஆண்டு அரசு உத்தரவுப்படி 5000 சதுர அடி பரப்பளவுக்கு மேல் உள்ள இடங்கள் அல்லது தினசரி 1000 கிலோவுக்கு மேல் குப்பை உருவாக்கப்படும் இடங்களில் தாங்களாகவே குப்பையை அகற்றி கொள்ள வேண்டும்.

    இதற்காக பதிவு செய்து, திருமண மண்டபங்கள் தனியாக வரி செலுத்துகின்றன. ஆனால் காட்டேஜ்களில் இதுபோல் எந்த வரியும் செலுத்தாமல் திருமண வரவேற்பு விழா நடத்துவதால், அங்கு குப்பை அதிகளவில் சேர்கிறது. எனவே காட்டேஜ்களில் திருமண வரவேற்பு விழா நடத்தக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×