என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சின்னமனூரில் வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்திய ஆசிரியர்
- திருமணத்தின்போது 20 பவுன் தங்க நகையும், ரூ.1 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும் கொடுக்கப்பட்டது.
- மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் புகாரின் பேரில் ஆசிரியர் உள்பட அவரது குடும்பத்தினரை மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் வெள்ளைப்பாண்டியன். இவர் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், திருப்பூர் மாவட்டம் பூச்சக்காடு கருவம்பாளையத்தை சேர்ந்த பிரியா(27) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது 20 பவுன் தங்க நகையும், ரூ.1 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும் கொடுக்கப்பட்டது. திருமணத்திற்கு பின்னர் கூட்டுகுடும்பமாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கணவர் வெள்ளைப்பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரியாவிடம் பேசாமல் இருந்து வந்ததாகவும், நகையையும் வாங்கி வைத்து கொண்டதாகவும் போடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
மேலும் தன்னிடம் கூடுதலாக நகைகள் வரதட்சணையாக வாங்கி வருமாறு கேட்டு அடித்து துன்புறுத்தியாக அதில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கோர்ட்டு உத்தரவுப்படி போடி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். வரதட்சணை கேட்டு துன்புறுத்திய வெள்ளைப்பாண்டியன் அவரது தந்தை ரவி, தாய் ெபாம்மி உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.