search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாகுபடி பணிக்காக வாய்க்கால் சீரமைப்பு
    X

    வாய்க்காலை சீரமைப்பு பணி நடந்தது.

    சாகுபடி பணிக்காக வாய்க்கால் சீரமைப்பு

    • நிதி பற்றாக்குறை உள்ளதாக கூறி வடிகால்கள் தூய்மைப்படுத்–தப்படவில்லை.
    • நேரடி தெளிப்பு செய்துள்ள சம்பா 30 நாள் நெற்பயிராக உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே சுமார் 3.5 கி.மீ தூரம் சொந்த செலவில் வடிகால் வாய்க்காலில் முளைத்த ஆகாயத்தாமரையை அகற்றும் பணியில் விவசாயிகள் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி கடைமடை பகுதியாகும். ஓவரூர் வடிகாலிலும் அதனை தொடர்ந்து வளவனாற்றிலும் ஆகாயத்தாமரை வலுவாக படர்ந்துள்ளது.

    இதனால், கீழப்பெருமலை, மேல பெருமலை, இடும்பாவனம், விளாங்காடு, குன்னலூர், எக்கல், பாண்டி, கோட்டகம், வெள்ளங்கால், கரையன் காடு, ஓவர்குடி ஓவரூர் ஆகிய கிராமங்களின் வடிகாலாக ஓவரூர் வடிகால் உள்ளது.

    சிறு மழை பெய்தால் கூட மேற்கண்ட கிராமங்களை சூழும் மழைநீர் ஆனது ஒவரூர் வடிகாலில் விழுந்து அதன் பின்னர் வளவனாற்றில் கலக்க வேண்டும். ஆனால் ஓவரூர் வடிகால் முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளதால் சிறு மழை பெய்தால் கூட தண்ணீர் வடியாமல் வயல்களில் வெள்ள நீர் சூழ்ந்து பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

    இதன் காரணமாக வீட்டுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் விவ சாயிகள் ஒருங்கிணைந்து குன்னலூர் முதல் கீழப்பெருமலை வரை உள்ள படந்துள்ள ஆகாயத்–தாமரைகளை அகற்றி வருகின்றனர்.

    மேலும் ஜேசிபி வாகனம் ஒன்றையும் கிராம நிதியிலிருந்து வாடகைக்கு பணியமரத்தி உள்ளனர்.

    இதுகுறித்து கீழப்பெரு மழை கிராம விவசாயிகள் கூறும்போது கடந்த ஆண்டு இந்த வடிகால்வாய்க்காலை தூய்மைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தோம் நிதி பற்றாக்குறை உள்ளதாக கூறி வடிகால் தூய்மைப்படுத்–தப்படவில்லை இந்த ஆண்டும் அதே பதிலை தான் பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

    தற்போது குறுவை நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகிய உள்ளன.

    அதேபோல் நேரடி தெளிப்பு செய்துள்ள சம்பா 30 நாள் நெற்பயிராக உள்ளது அவ்வப்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் சிறிய மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி குறு வை மற்றும் சம்பா நெற்பயர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளதால் விவசாயிகள் ஒன்று கூடி பேசி வீட்டுக்கு ஒருவர் வேலைக்கு வர வேண்டும், கிராம நிதியில் ஜேசிபி இயந்திரம் வாடகைக்கு நியமித்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் ஆகாயத்தாமரை அகற்றும் பணியை விவசாயிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

    வடிகால் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தி விட்டால் மழை வெள்ள பாதிப்பில் இருந்து நெற்பயிர்கள் பாதுகாக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர். இந்த பணியினால் 10 கிராமங்களில் 5000 ற்கும் மேற்பட்ட ஏக்கரில் உள்ள குறுவை சம்பா பயிர்கள் மழை வெள்ளத்தில் இருந்து காக்கப்படும்.

    Next Story
    ×