search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் திட்டங்கள் மற்ற மாநில வாக்குறுதியாக இடம்பெறுகிறது-பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு
    X

    திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் திட்டங்கள் மற்ற மாநில வாக்குறுதியாக இடம்பெறுகிறது-பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு

    • வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை ரூ.1,100 ஆக உயர்த்தியதுதான் பா.ஜனதாவின் சாதனை.
    • குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை வருகிற செப்டம்பர் 15-ந் தேதி முதல் முதல்-அமைச்சர் வழங்க உள்ளார்.

    கோவை,

    தி.மு.க. அரசின் 2-ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் கோவை ஆர்.எஸ். புரம் தெப்பக்குளம் மைதானத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் தலைமை தாங்கினார்.

    இதில் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:-

    திராவிட மாடல் ஆட்சி என்றால் பா.ஜனதாவிற்கு பிடிக்காது. திராவிட மாடல் ஆட்சிதான் தமிழகத்திற்கு எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களை தந்துள்ளது. தி.மு.க. அரசு பொறுப் பேற்றதும் பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டத்தை கொண்டு வந்தது. உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்குகிறது. பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்குகிறது.

    இதுபோன்ற ஒரு திட்டத்தையாவது பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெண்களுக்காக செயல்படுத்தப்பட்டு உள்ளது என்று கூற முடியுமா? ஒரே ஒரு சாதனையை தான் பா.ஜனதா அரசு செய்து உள்ளது. ரூ.450 என்று இருந்த வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை ரூ.1,100 ஆக உயர்த்தியதுதான் அவர்களின் சாதனை.

    234 தொகுதிகளிலும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் முதல்- அமைச்சர் செயல்பட்டு வருகிறார். முதல்-அமைச்சர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆகியோர் கோவைக்கு ஒவ்வொரு முறையும் வரும்போது இங்குள்ள மக்களுக்கு எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களை தந்துள்ளனர். அதுதான் திராவிட மாடல் அரசு.

    குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை வருகிற செப்டம்பர் 15-ந் தேதி முதல் முதல்-அமைச்சர் வழங்க உள்ளார். திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் திட்டங்கள் மற்ற மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதியாக இடம் பெறுகின்றன. ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் 222 புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 322 கோடி மதிப்பிலான முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வந்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    இவ்வாறு அவர்பேசினார்.

    இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×