என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மூலவைகை வறண்டது மலைக்கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு
- 71 அடி உயரம் உள்ள வைகை அணை உள்ளது. இந்த அணைக்கு போடி கொட்டக்குடி ஆறு, மூலவைகையாறு ஆகியவை முக்கிய நீர்வழிப்பகுதிகளாக உள்ளன.
- ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் உறைகிணறுகளிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதேநிலை நீடித்தால் இப்பகுதி மலைக்கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
வருசநாடு:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் உள்ள வைகை அணை உள்ளது. இந்த அணைக்கு போடி கொட்டக்குடி ஆறு, மூலவைகையாறு ஆகியவை முக்கிய நீர்வழிப்பகுதிகளாக உள்ளன.
வருசநாடு பகுதியில் கூடம்பாறை, அரசரடி, வெள்ளிமலை, புலிக்காட்டு ஒடை, இந்திராநகர், பொம்முராஜபுரம், காந்திகிராமம், வாலிப்பாைற, தும்மக்குண்டு உள்ளிட்ட ஏராளமான மலைகிராமங்கள் உள்ளன.
இங்குள்ள மலைத்தொடர்களில் பெய்யும் மழைநீர் சிற்றாறுகளாக பெருகி மூலவைகையாக உருவெடுக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர்மழையால் மூலவைகையில் நீர்வரத்து காணப்பட்டது. கோடைகாலம் தொடங்கியது முதல் மழை இல்லாததால் தற்போது மூலவைகையாறு முற்றிலும் வறண்டுவிட்டது. கடமலை, மயிலை ஒன்றியத்தில் ஆத்தங்கரைபட்டி, துரைச்சாமிபுரம், எட்டப்பராஜபுரம், கண்டமனூர், கடமலைக்குண்டு, குமணன்ெதாழு, மந்திச்சுனை, முருக்கோடை, நரியூத்து, பாலூத்து உள்ளிட்ட 18 கிராம ஊராட்சிகள் உள்ளன.
இதில் மேகமலையை தவிர்த்து 17 கிராம ஊராட்சிகளில் குடிநீர் தேவை மூலவைகை மூலமே கிடைத்து வருகிறது. இதற்காக ஆற்றில் ஏராளமான உறைகிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து பெறப்படும் நீர் சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.
தற்போது ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் உறைகிணறுகளிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதேநிலை நீடித்தால் இப்பகுதி மலைக்கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மூலவைகையில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருப்பதில்லை. மழைக்காலங்களில் மட்டுமே நீரோட்டம் இருக்கும். இதனால் ஆண்டின் பல மாதங்கள் இங்குள்ள ஊராட்சிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை மூலம் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை வரை தண்ணீர் கொண்டு செல்லப்படும் நிலையில் இந்த மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி மலைக்கிராமங்கள் வருடத்தின் பல மாதங்கள் வறட்சியாகவே உள்ளது. எனவே இதனை போக்க தடுப்பணை அமைத்து நீரை தேக்கி நிரந்தர தீர்வு காணவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்