search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரத்து அதிகரிப்பால்  தக்காளி விலை சரிவு
    X

    வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு

    • வெப்பத்தால் அதிக அளவில் பழுக்கும் நிலையில் தக்காளி மார்கெட்டிற்கு வரத்து அதிகரித்து காணப்படுகிறது/
    • விலை குறைவு தக்காளி பயிரிட்ட விவசாயிகளுக்கு கடும் வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது கோடை வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் தக்காளி செடிகளில் உள்ள பழங்கள் வெப்பத்தால் அதிக அளவில் பழுக்கும் நிலையில் தக்காளி மார்கெட்டிற்கு வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    இதனால் விலை கடுமையாக சரிந்துள்ளது. இன்று ஒரு கிலோ தக்காளி விலை கிலோ 6 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை விற்பனையானது.

    கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி 25 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனையானது. ஒரே மாதத்தில் தக்காளி வரத்து அதிகரித்து அதன் காரணமாக விலை குறைந்துள்ளது.

    இந்த விலை குறைவு தக்காளி பயிரிட்ட விவசாயிகளுக்கு கடும் வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழக அரசு சார்பில் தக்காளி விலை குறைவு காலங்களில் தக்காளியை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக தயாரித்து விற்பனை செய்ய வாகனம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

    வாகனம் விவசாயிகளுக்கு பயன் இல்லாத வகையில் உள்ளது. இதுபோன்று தக்காளி விலை குறைவான காலங்களில் தக்காளியை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விவசாயிகள் விற்பனை செய்ய விற்பனை சந்தையை அரசு ஏற்படுத்திக் கொடுத்தால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் தங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை தவிர்க்க முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×