என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வரத்து குறைவால் தருமபுரி மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை உயர்வு
- முருங்கைக்காய் வருடம் முழுவதும் கிடைக்கும் வகையில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
- மேச்சேரி பகுதியில் இருந்து வரும் முருங்கைக்காய் தருமபுரி மாவட்ட மக்களின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
தருமபுரி,
தமிழர்களின் அனைத்து வைபவங்களிலும், பாரம்பரிய உணவிலும் முக்கிய அங்கம் வகிப்பது முருங்கை க்காய். பெரும்பாலும் முருங்கைக்காய் வருடம் முழுவதும் கிடைக்கும் வகையில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளான, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், பென்னாகரம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மட்டுமே முருங்கைக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் அனைத்து வீடுகளிலும் வீட்டிற்கு ஒரு மரம் என முருங்கை வளர்க்கப்படுகிறது.
தற்போது தருமபுரி மாவட்டத்தில் முருங்கை சீசன் இல்லாததால் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் இருந்தும், மேட்டூர் மேச்சேரி பகுதியில் இருந்து வரும் முருங்கைக்காய் தருமபுரி மாவட்ட மக்களின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
தற்பொழுது விளைச்சல் குறைவால் தருமபுரி மாவட்டத்திற்கு முருங்கைக்காய் வரத்து குறைந்துள்ளது. அதனால் 30 ரூபாயிலிருந்து 35 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் தற்போது தருமபுரி உழவர் சந்தையில் 60 ரூபாய்க்கும், வெளி மார்க்கெட்டில் 75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.