என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆலங்குளம் அருகே குளத்தின் நடுவே சரிந்து விழும் நிலையில் மின்கம்பம் - உடனடியாக அப்புறப்படுத்த மக்கள் கோரிக்கை
- மருதம்புத்தூர் ஊராட்சியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன.
- பருவமழையால் குளங்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
நெல்லை:
ஆலங்குளம் யூனியன் மருதம்புத்தூர் ஊராட்சியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் மற்றும் கிணறுகள் மூலமாக இங்கு பாசனம் நடைபெற்று வருகிறது. சமீப காலமாக குளங்களுக்கு தண்ணீர் வரும் ஓடைகள் தூர்ந்து போன காரணத்தினால் தண்ணீர் ஓட்டம் தடைபட்டு கடந்த 2 ஆண்டுகளாகவே குளங்கள் வறண்டு காணப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு பெய்துவரும் வடகிழக்கு பருவமழையால் குளங்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. ஊருக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள ஊரடி குளம் என்றழைக்கப்படும் உருண்டைகுளத்திற்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த குளத்தின் வழியாக மின்கம்பங்கள் செல்கிறது.
இதில் ஒரு மின்கம்பம் சரிந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலையில் இருந்து வருகிறது. அதனை சரிசெய்ய வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக பஞ்சாயத்து தலைவர் பூசத்துரை, ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா சுதாகர், உறுப்பினர் சேர்மன்ராஜா ஆகியோர் மின்வாரி யத்திற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால் இதுவரையிலும் மின்கம்பம் சரி செய்யப்படாத நிலையில், தற்போது குளத்தில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் மின்கம்பம் சரிந்து நீருக்குள் விழும் நிலை இருக்கிறது. அவ்வாறு சாய்ந்தால் குளத்தின் நீரில் மின்சாரம் பரவி விவசாயிகள், பொதுமக்கள், கால்நடைகளுக்கு பெரிய ஆபத்து நேரிடும் என்று அப்பகுதியினர் புகார் கூறுகின்றனர்.
எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக அந்த குளத்திற்கு சென்று ஆய்வு செய்து, மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனிடம் அந்த கிராம மக்கள் புகார் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.