search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    யானை தாக்கி படுகாயமடைந்த முதியவர் சாவு   -குடும்பத்திற்கு வனத்துறையினர் நிதியுதவி
    X

    யானை தாக்கி படுகாயமடைந்த முதியவர் சாவு -குடும்பத்திற்கு வனத்துறையினர் நிதியுதவி

    • ஒற்றை யானை தாக்கியது. சிகிச்சை பலனின்றி இறந்தார்.
    • இழப்பீட்டுத் தொகையாக ரூ.50 ஆயிரம் காசோலையை வழங்கினார்கள்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள சாத்தனக்கல்லை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 70).

    இவர் ராயக்கோட்டை வனச்சரகம் ஊடேதுர்கம் காப்புக் காட்டில் கடந்த 4-ந் தேதி மாலை கிருஷ்ணன் காட்டை ஒட்டியுள்ள நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

    அவரை அவ்வழியாக வந்த ஒற்றை யானை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த கிருஷ்ணனை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக 5-ந் தேதி தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை மேற்கொண்ட நிலையில், நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதையடுத்து, தருமபுரி மண்டல வனப்பாதுகாவலர் பெரியசாமியின் அறிவுரையின்படி, ஓசூர் வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனியின் உத்தரவின்பேரில், ராயக்கோட்டை வனச்சரகர் பார்த்தசாரதியின் தலைமையில், ஊடேதுர்கம் பிரிவு வனவர் வரதராஜன், மேற்கு பீட் வனக்காப்பாளர் ராம்குமார் ஆகியோர் நேற்று கிருஷ்ணனனின் வீட்டிற்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

    மேலும் அவரது மனைவி சித்தம்மாவிடம் முதல் கட்ட இழப்பீட்டுத் தொகையாக ரூ.50 ஆயிரம் காசோலையை வழங்கினார்கள்.

    Next Story
    ×