search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரி அருகே பழங்குடியின கிராமத்திற்கு முதல் முறையாக  மின்சார வசதி
    X

    கோத்தகிரி அருகே பழங்குடியின கிராமத்திற்கு முதல் முறையாக மின்சார வசதி

    • கோத்தகிரி பகுதியில் உள்ள கிராமங்களில் குரும்பர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்
    • பல ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய மாவட்ட கலெக்டருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

    அரவேணு

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள கிராமங்களில் குரும்பர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள அணில் காடு பழங்குடியின கிராமத்தில் 8க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பழங்குடி கிராமத்தில் பல ஆண்டு காலமாக மின்சார வசதி இல்லாமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.


    இந்த கிராமத்தில் சமீபத்தில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆய்வு செய்தார். அப்போது மின் இணைப்பு கோரி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த குக்கிராமத்திற்கு மின்சாரம் இணைப்பு வழங்க மின்வாரியம் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து கிராமத்தில் உள்ள 8 பழங்குடியின குடும்பங்களுக்கு மின்சாரம் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, தற்போது கம்பம் நடப்பட்டு, மின்கம்பிகள் பொருத்தி வீடுகளுக்கு மின் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய மாவட்ட கலெக்டருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×