என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வங்கி பணிகளில் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்
- வங்கி பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.
- தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் மந்திய அரசை கண்டித்து திராவிடர் கழகம இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞரணி துணை செயலாளர் செல்லதுரை தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி தலைவர் முனியப்பன் வரவேற்றார்.
முன்னாள் மாவட்ட தலைவர் சிவாஜி, மாவட்ட தலைவர் சரவணன், மாவட்ட துணை செயலாளர் காமராஜ், கழக காப்பாளர்கள் ஆசைத்தம்பி, விடுதலை தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் வேட்ராயன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
தலைமைக் கழக அமைப்பாளர் ஜெயராமன் சிறப்புரையாற்றினார்.
வங்கி பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் போன்ற கோரிக்ககைளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.