search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பசுமையாக காட்சியளிக்கும் சென்னிமலை வனப்பகுதி
    X

    பச்சை பசேல் என காணப்படும் சென்னிமலை மலை பகுதி.

    பசுமையாக காட்சியளிக்கும் சென்னிமலை வனப்பகுதி

    • மழையால் சென்னிமலையில் மலை பகுதி பச்சை போர்வை போர்த்தியது போல் காட்சி அளிக்கிறது.
    • பக்தர்கள் வனப்பகுதி இயற்கை அழகையும் கண்டு ரசித்து செல்கின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை மலை வனப்பகுதி 1,400 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த மலை முற்றிலும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    கடந்த 3 மாதங்களாக கடும் கோடை வெயிலின் தாக்கத்தால் மலை பகுதியில் உள்ள மரங்கள் எல்லாம் வாடி இலைகள் உதிர்ந்து வறண்டு கிடந்தது. இதனால் சென்னிமலை மலையினை பார்த்தால் வறண்ட பாலைவனம் போல் ஆங்காங்கே பாறைகள் தெரிய கிடந்தது.

    இந்த நிலையில் கடந்த வாரத்தில் பெய்த மழையால் சென்னிமலையில் மலை பகுதியில் இருந்த மரம், செடி, கொடிகள் நன்கு துளிர் விட்டு செழித்து வளர்ந்துள்ளதால் தற்போது பார்பதற்கு மலை பச்சை பசேல் என பச்சை போர்வை போர்த்தியது போல் காட்சி அளிக்கிறது.

    சென்னிமலை முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் தற்போது மலையின் வனப்பகுதி இயற்கை அழகையும் கண்டு ரசித்து செல்கின்றனர்.

    இதில் மான்களும், குரங்குகளும், மயில்களும், முயல்களும், பல ரக பறவைகளும் குதூகளித்து விளையாடுவது பொதுமக்களை மேலும் பரவச படுத்துகிறது.

    Next Story
    ×