search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொப்பரை தேங்காய் கொள்முதல் காலம் நீட்டிப்பு- கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    கொப்பரை தேங்காய் கொள்முதல் காலம் நீட்டிப்பு- கலெக்டர் தகவல்

    • பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் 1,642 டன்களும் அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது.
    • மத்திய அரசின் கொள்முதல் நிறுவனமான தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் குறைந்தபட்ச தரத்தினை பரிந்துரை செய்துள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயி கள் தங்கள் விளை பொருட்களுக்கு நல்ல விலை பெறுவதற்கும் தமிழக அரசு அனைத்து உரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தற்போது அரவை கொப்ப ரையின் விலை குறைந்து ள்ளதால்,

    தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் குறைந்தபட்சஆதரவு விலையில் அரைவை கொப்பரையை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்தது.

    இதைத்தொடா்ந்து தஞ்சாவூா் விற்பனை க்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஒரத்தநாடு ஒழுங்குமுறை விற்பனை க்கூடத்தின் மூலம் 853.180 டன்களும், பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் 1,642 டன்களும் அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது.

    மத்திய அரசால் அறிவிக்க ப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையான கிலோ ஒன்று க்கு ரூ. 105.90 விலையில் அரைவை கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது.

    கொப்பரை கொள்முதல் காலம் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை என நடைமுறையில் இருந்த நிலையில், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இத்திட்டம் இந்த மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    எனவே, இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகி தங்களது நிலச்சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை அளித்து பதிவு செய்து கொள்ளலாம். கொப்பரைக்கான கிரையத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

    மத்திய அரசின் கொள்முதல் நிறுவனமான தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் குறைந்தபட்ச தரத்தினை பரிந்துரை செய்துள்ளது.

    அதன் அடிப்படையில் அரவை கொப்பரையின் குறைந்தபட்ச தரம் அயல் பொருட்கள் 1 சதவீதமும், பூஞ்சானம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை 10 சதவீதமும், சுருக்கம் கொண்ட கொப்பரை 10 சதவீதம், சில்லுகள் உடைபாடு 10 சதவீதம் மற்றும் ஈரப்பதம் 6 சதவீதம் கொண்டதாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×