என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சையில், நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
- மாநிலம் முழுவதும் அனைத்து நியாய விலைக்கடை பணியாளர்களும் போராட்டம் நடத்த உள்ளோம்.
- வருகிற 27-ந்தேதி மாநிலம் முழுவதும் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் தேசிங்குராஜா தலைமை தாங்கினார்.
மாநில பொதுச்செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் பிரகாஷ், மாநில இணை செயலாளர்கள் ராமலிங்கம், பாஸ்கர், குணசீலன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தஞ்சை மாவட்ட தலைவர் அறிவழகன் வரவேற்றார்.
கூட்டத்தில் அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நியாய விலைக்கடைகளில் மத்திய அரசு அளிக்கும் பொருட்களுக்கு ஒரு பில், மாநில அரசு அளிக்கும் பொருட்களுக்கு ஒரு பில் என இரட்டை ரசீது முறை உள்ளதால் பணியாளர்கள், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே இரட்டை பில் முறையை ஒழித்து ஒரே பில் வழங்க வேண்டும்.
பொருட்களை எடை போட்டு ரேஷன் கடைகளுக்கு கொடுக்காமல், பணியாளர்களை பழிவாங்கும் எண்ணத்தோடு, ஆய்வு செய்து இருப்பு குறைவு என்று கூறி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி மாநிலம் முழுவதும் அனைத்து நியாய விலைக்கடை பணியாளர்களும் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த உள்ளோம்.
எனவே தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை தீர்க்க முன்வர வேண்டும்.
சட்டசபையில் நிறைவே ற்றப்பட்ட தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டத்தை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும்.
அதை வலியுறுத்தி வருகிற 27-ந்தேதி மாநிலம் முழுவதும் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.