என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விலை சரிவால் தக்காளிகளை சாலையில் கொட்டி சென்ற விவசாயிகள்
- தக்காளிகளை விற்பனை செய்யும் சந்தைகளுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து செலவுக்கு கூட போதுமானதாக இல்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்
- அப்படியே எடுத்துச் சென்றாலும் அங்கே வாங்க போதுமான வியாபாரிகள் இல்லாததால் சந்தையிலே கொட்டிவிடும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பால க்கோடு மாரண்டஹள்ளி, வெள்ளிச்சந்தை, பஞ்சப்பள்ளி, பேகரஹள்ளி, பெல்ரம்பட்டி, கரகூர், சீங்காடு, சீறிம் பட்டி, ஐந்து மைல்கள், உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வழக்கமாக சுழற்சி முறையில் தக்காளி சாகுபடி செய்கின்றனர்.
அவற்றை, பாலக்கோடு பகுதியில் அமைந்த பிரத்தியோக தக்காளி சந்தையில் ஏற்றுமதி செய்து வருவது வழக்கம்.
பாலக்கோடு தக்காளி சந்தையில் இருந்து ஈரோடு, தேனி, திண்டுக்கல், சென்னை, உள்ளிட்ட மாவட்டங்களுக்கும். கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தக்காளி ஏற்றுமதியாகிறது.
கடந்த இரண்டு வாரமாக தக்காளி கொள்முதல் விலை கிலோ ரூ.10 குறைந்து விற்பனையாவதால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டு, சாகுபடி செய்த தக்காளிகளை பறிக்காமல் விளை நிலத்திலேயே விட்டுள்ளனர்.
பாலக்கோடு தக்காளி சந்தையில் ஒரு கூடை விற்பனைக்கு 20 ரூபாய் சுங்க கட்டணம் வசூல் செய்கின்றனர். தக்காளி விற்பனை செய்ய வரும் விவசாயிகள் சுங்கக்கட்டணம் கட்டி விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.
தற்போது 25 கிலோ வரை எடை கொண்ட தக்காளிப்பழங்கள் மிகவும் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ரூ.120 மட்டுமே விலை போவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கடந்த காலங்களில் ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது விலை குறைந்து கட்டுப்படியான விலை கிடைக்காமல் உள்ளதால் தக்காளிகளை விற்பனை செய்யும் சந்தைகளுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து செலவுக்கு கூட போதுமானதாக இல்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
அப்படியே எடுத்துச் சென்றாலும் அங்கே வாங்க போதுமான வியாபாரிகள் இல்லாததால் சந்தையிலே கொட்டிவிடும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் விலையில்லாமல் எடுத்து வரும் தக்காளிகள் அங்கேயே சாலை ஓரங்களில் கொட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் உரிய விலை இல்லாததால் விவசாயிகள் பலர் தற்போது தக்காளிப் பழங்களை பறிக்காமல் செடிகளிலேயே விட்டு விடுகின்றனர். ஆகவே தக்காளியை அரசு கொள்முதல் செய்து உரிய விலை நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்