என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
போடி பகுதியில் தக்காளி விலை சரிவால் பறிக்காமல் விடும் விவசாயிகள் - செடியிலேயே அழுகும் அவலம்
- உச்சத்தில் விற்ற தற்போது விலை கடுமையாக சரிந்துள்ளது தக்காளி வியாபாரிகளிடையே கவலையை ஏற்படுத்தி யுள்ளது.
- போக்குவரத்து செலவுக்கு கூட விலை கிடைக்காததால் செடியிலேயே பறிக்காமல் விட்டு விடுகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை 1கிலோ ரூ.200க்கு மேல் விற்பனையானது. இதனால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தமிழக அரசு ரேசன் கடை மூலம் குறைந்த விலைக்கு தக்காளி விற்க நடவடிக்கை எடுத்தது. சில வியாபாரிகள் தக்காளி விற்றே லட்சாதிபதி ஆனார்கள். ஆனால் தற்போது விலை கடுமையாக சரிந்துள்ளது தக்காளி வியாபாரிகளிடையே கவலையை ஏற்படுத்தி யுள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகே ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் தக்காளி விலை உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் அதிகளவு சாகுபடி செய்தனர். ஆனால் வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.உரம், பூச்சி மருந்து பறிப்பு கூலி, போக்குவரத்து செலவுக்கு கூட விலை கிடைக்காததால் செடியிலேயே பறிக்காமல் விட்டு விடுகின்றனர்.
இதனால் ரூ.200க்கும் மேல் விற்ற தக்காளி தற்போது யாரும் வாங்க முன்வராத நிலையில் செடியிலேயே அழுகி வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு நேரடியாக விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.